ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்ட 100 நாள் வேலைத்திட்டங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.
அவரது வாக்குகளை கண்முன்னே கொண்டுவருவார் என்ற நம்பிக்கையோடு எமது நாட்களையும் ஆரம்பிக்கின்றோம்..
எம் தாய் மண்ணின் புதிய ஜனாதிபதி அவர்களுக்கு East News First இன் வாழ்த்துக்கள்...
1.அரச ஊழியர்களுக்கு 10000 ரூபா சம்பள அதிகரிப்பினை வழங்குதல் மற்றும் அதன் ஆரம்பமாக உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பெப்ரவரி மாத சம்பளத்திற்கு 5000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குதல். அனைத்து கொடுப்பனவுகளையும் உள்ளடக்கி ஒன்றிணைந்த சம்பளம் நிர்ணயிக்கப்பட்டதன் பின்னர் மிகுதி தொகையுடன் மிகுதி சம்பள அதிகரிப்பை வழங்குதல்.
2. மோட்டார் சைக்கிள் வழங்கும் போது அசாதாரணத்திற்கு உள்ளான அரச ஊழியர்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்து அவர்களுக்கும் நிவாரணம் வழங்குதல்.
3. அரசியல் அடிமை வேலைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பட்டதாரிகளை அரச சேவைக்கு உள்ளீர்த்து அவர்களின் தகைமைகளுக்கு ஏற்ற பதவி உயர்வு திட்டத்தை ஏற்படுத்தல்.
4. ஓய்வூதியதாரர்களின் வேற்றுமையை அகற்றும் வகையில் அவர்களுக்கு 3500 ரூபா மாதாந்த மேலதிக கொடுப்பனவை பெற்றுக்கொடுத்தல்.
5. அரச வங்கிகளில் உள்ள சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புக்களில் முதல் 10 இலட்சத்திற்காக செலுத்தப்ப டும் வட்டியை 15% வரை அதிகரித்தல்.
6. சமுர்த்தி கொடுப்பனவை அதிகப்பட்சம் 200 ரூபா வரை அதிகரித்தல்.
7. குழந்தையை பிரசவிக்கும் அனைத்து தாய்மாருக்கும் போசணைமிகு உணவை பெற்றுக்கொள்வதற்காக 20000 ரூபா வரையான கொடுப்பனவை பெற்றுக்கொடுத்தல்.
8. அத்தியாவசியப்பொருட்கள் பத்துக்காக அறவிடப்படும் அதிக வரியை அகற்றி விலையை குறைத்தல். அதற்கு இணையாக அத்தியாவசிய உணவு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுத்தல்.
9. எரிபொருட்களினால் அரசு அறவிடும் 4000 கோடிக்கும் அதிகமான வரியை அகற்றி, எரிப்பொருட்களின் விலையை குறைத்து அதன் பலனை பொது மக்களுக்கு பெற்றுக்கொடுத்தல்.
10. போக்குவரத்து கைத்தொழிலுக்கு தேவையான ஊக்குவிப்பு கொடுப்பனவு பெற்றுக்கொடுத்து அரசு மற்றும் தனியார் துறையின் பொது போக்குவரத்து சேவையின் வினைத்திறனை உயர்த்த நடவடிக்கை எடுத்தல்.
11. வீட்டு கேஸ் சிலின்டரின் விலையை 300 ரூபாவால் குறைத்தல்.
12. நெல் கொள்வனவுக்கான உத்தரவாத விலை ஒரு கிலோவுக்கு50 ரூபா வரை அதிகரித்தல்.
13. உருளைக்கிழங்கு ஒருகிலோவுக்கான கொள்வனவுக்கான உத்தரவாத விலை 80 ரூபா வரை அதிகரித்தல்.
14. பச்சை தேயிலை கொழுந்து ஒரு கிலோ வுக்கு 80 – -90 ரூபா வரையான மிதக்கும் விலையை பேணுதல்.
15. இறப்பருக்கு 350 ரூபா மிதக்கும் விலையைப் பேணுதல்.
16. பாற்பண்ணையாளர்களுக்கு ஒரு லீற் றர் பாலுக்கு தற்போது செலுத்தப்படும் 60 ரூபா உத்தரவாத விலையை 10ரூபாவால் அதிகரித்தல்.
17. அனைத்து விவசாய கடன்களையும் 50%த்தால் கழித்து செலுத்தவுள்ள மிகுதி தொகையை மீளாய்வு செய்து செலுத் துவதற்கு சலுகைக்காலம் வழங்குதல்.
18. தற்போது வழங்கப்படும் மண்ணுக்கும் பயிர்ச்செய்கைக்கும் மனிதனுக்கும் தீங்கு விளைவிக்கும் தரம் குறைந்த உரத்திற்காக உயர் நிலையிலான மற்றும் தரத்திலான உரத்தை வழங்குதல்.
19. தற்போது வழங்கப்படும் தரம் குறைந்த உரத்திற்குப் பதிலாக தரத்திலான உரத் தை சிறிய தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தல்.
20. நடுக்கடலில் உயிரிழக்கும் மீனவருக்காக பத்து இலட்சம் வரையான காப்புறுதியினை அரச பங்களிப்புடன் பெற்றுக்கொடுத்தல்.
21. விவசாயிகளுக்கு பயிர்சேத காப்புறுதியினை அரச பங்களிப்புடன் பெற்றுக்கொடுத்தல்.
22. விவசாய,மீனவ சமூகத்திற்காக புதிய ஓய்வூதிய சம்பள திட்டத்தை ஆரம்பித் தல்.
23. முச்சக்கர வண்டி சாரதிகள், மேசன் அல்லது தச்சு, சிறிய வர்த்தகம் உள்ளிட்ட தொழிற்றுறைகளில் ஈடுபட்டுள் ளவர்களுக்காக ஓய்வூதிய திட்டம் ஒன்றை ஆரம்பித்தல்.
24. வெளிநாட்டில் தொழில் புரியும் ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் ஒன்றை ஆரம்பித்தல் மற்றும் அவர்களின் இந்நாட்டு வதியாதோர் கணக்குக்கு 2.5% வட்டியினை தற்போது வழங்கப்படும் வட்டி வீதத்திற்கு சேர்த்தல்.
25. மத்திய கிழக்கு உள்ளிட்ட வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர் களின் குடும்பத்தை பார்த்துக்கொள் வதற்காக விஷேட குடும்ப காப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பித்தல்.
26. அதிகபட்சம் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதி வரை அடகு வைத்துள்ள தங்க நகைகளுக்கு செலுத்த வேண்டிய அதிக வட்டி மற்றும் தண்ட பணத்தை அகற்றுதல்.
27. பல்வேறு நிதி நிறுவனங்களினால் வழங்கப்பட்ட உறுதி, கடனட்டை திட் டம் மற்றும் பிரமிட் திட்டம் மூலம் ஏமாற்றத்திற்கு உள்ளானமையினால் சிக்கியுள்ள கடனுக்கு மேல் கடனை அகற்ற தேவையான நடவடிக்கை எடுத் தல்.
28. பெண்களுக் எதிரான வன்முறை, சிறு வர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்தி பெண்களுக்கு மற்றும் சிறுவர்களுக்கு எமது நாட்டில் சுதந்திரமாக வாழும் வகையில் புதிய சட்டத்தை உருவாக்குதல் மற்றும் சட் டத்தை வலுவாக நடைமுறைப்படுத் தல்.
29. யுத்தத்தால் விதவைகளான அனைத்து சமூக பெண்களுக்கும் மற்றும் அவர்களில் தங்கி வாழ்பவர்களுக்கு விஷேட காப்புறுதி திட்டத்தை அறிமுகப்படுத் தல்.
30. அரசியல் தீர்மானம் எடுப்பதற்கு பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக மாகாண நிர்வாக மற்றும் மாகாண சபைகளில் பெண் அங்கத்துவத்தை குறைந்த பட்சம் 25%மாவது இருத்தல் வேண்டும் என்பதனை சட்டமாக்குதல்.
31. எமது இளைஞர்கள் எதிர்நோக்கும் வேலையில்லா பிரச்சினையை முழுமையாக இல்லாதொழிக்கும் நோக்கில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் மற்றும் சுய தொழில் பத்து இலட்சத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்தை உருவாக்குதல்.
32. இளைஞர் – யுவதிகளுக்கு தாம் விரும் பிய கருத்தை முன்வைக்கவும் அதனை தெரிவிக்கவும் மற்றும் அதனை வினைத்திறன் மிக்கதாக உருவாக்க சுதந்திரமான இளமை காலத்தை அனுபவிக்க உள்ள உரிமையை உறுதிப்படுத்தல்.
33. இலவசமாக இன்டர்நெட் பெற்றுக் கொடுத்தல். பிரதான இடங்களில் ‘வைபை’ பெற்றுக்கொடுத்தல்
34. இளைஞர் பாராளுமன்றத்திற்கு பண அதிகாரத்தை பெற்றுக்கொடுத்து இளை ஞர் சமூகம் மற்றும் ஏனைய இளைஞர் அமைப்புக்களினால் முன்வைக்கப்படும் இளைஞர் வேலைத்திட்டங்களுக்கு செலவு செய்வதற்கு 2015 ஆம் ஆண்டுக்கு 250 மில்லியன் ரூபா இளை ஞர் பாராளுமன்றத்திற்கு ஒதுக்குதல்.
35. கடன் தகவல் பிரிவில் (CRIB) பட்டியலில் உள்ளடக்கப்பட்டு கடன் தொல்லையில் சிக்கியுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரிகள் மற்றும் கிரடிட் கார்ட் உரிமையாளர்களை அதிலிருந்து மீட்டு சிறிய நிபந்தனையுடனான கடன் செலுத்தும் சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுத்தல்.
36. கெசினோ, போதைவஸ்து, எதனோல், வியாபாரிகளுக்காக நாட்டின் வளர்ச்சிக்கு அர்ப்பணிக்கும் உள்நாட்டு வியாபார சமூகத்தினரை உருவாக்குவதற்காக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழிலாளர்களுக்கு சிறிய நிபந்தனையுடனான இலகு கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தல்.
37. ஏற்றுமதியை அதிகரித்தல் மற்றும் தொழில் வாய்ப்பை அதிகரித்தலை நோக்காக கொண்டு GSP+ உதவியை மீண்டும் பெற்றுக்கொடுத்தல்.
38. தற்போது நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கியை ஒன்றிணைக்கும் வேலைத்திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வருதல்.
39. சிறிய கடன் கட்டுப்பாடு செய்தல் மற் றும் அபிவிருத்தி செய்வதற்கு சுயாதீன அதிகார சபையை உருவாக்குதல்.
40. சிறிய முயற்சியாளர்களை பாதுகாப்பதற்காக அரச பணியகத்தை ஸ்தாபித்தல்
41. முச்சக்கர வண்டி துறைக்காக முச்சக்கர வண்டி உரிமையாளர்கள்,வங்கி பிரதிநிதிகள் உள்ளடங்கிய அரச அலுவலகத்தை உருவாக்குதல்.
42. வரவு செலவு திட்டத்தில் இலவச சுகாதாரத்திற்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 1.8% வரையான தொகையை 3%மாக அதிகரித்தல்.
43. அரச வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக வரும் நோயாளிக்கு தேவையான அனைத்து மருந்துகளும் குறைவில் லாமல் வைத்தியசாலைகளிலேயே வழங்குதல்.
44. அரச வைத்தியசாலைகளில் அறுவை சிகிச்சைக்காக பட்டியலில் இணைத்து உள்ள நோயாளிகளினதும் அறுவை சிகிச்சைகளை பூர்த்தி செய்ய அவசர வேலைத்திட்டம் ஒன்றை முன்வைத் தல்.
45. அரச வைத்தியசாலைகளில் வெளி நோயாளர் பிரிவை இரவு 10.00 மணி வைரை திறக்க நடவடிக்கை எடுத்தல்.
46. சிறுநீரக நோய்க்கு மூல காரணி என சந்தேகிக்கப்படும் களைநாசினி வகை, ஏனைய விவசாய இரசாயன பொருட்களுக்கு இடைக்கால தடை விதித்தல் மற் றும் சிறுநீரக நோயை கட்டுப்படுத்துவதற்கு குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டத்தை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தல்.
47. உணவு, அழகுசாதன பொருட்கள் மற்றும் சேவை, ஔடதம் போன்ற அனைத்து நுகர்வு பொருட்கள் கொள்வனவுக்காக வலுவான நிறுவகத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்தல்.
48. ஆயுர்வேத வைத்திய சேவையை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்தல்.
49. அனைத்து மேைலத்தேய, கீைழத்தேய மற்றும் தேசிய வைத்திய முறையை சிறந்த முறையில் ஒன்றிணைத்து ஒன்றி ணைந்த சேவையினை மக்களுக்கு வழங்க தேவையான நடவடிக்கை எடுத் தல்.
50. ஹெரோயின், கேரல கஞ்சா, டெபா உள்ளிட்ட அனைத்து போதைவஸ்தை யும் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் முழுமையாக அகற்ற முன்னுரிமை வழங்கு தல் மற்றும் தற்போது போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள இளைஞர்களை புனர்வாழ்வளிப்பதற்காக நாடளாவிய ரீதியில் உடனடி செயற்றிட்டத்தை வெளிநாட்டு உதவியுடன் முன்னெடுத்தல்.
51. போதைவஸ்து வியாபாரிகளை சுற்றிவளைப்பதற்காக ஒன்றிணைந்த விேஷட படையணியை உருவாக்குதல்.
52. புகையிலை உற்பத்தி பொதிகளில் பட ரீதியான சுகாதார எச்சரிக்கையை 80% வரை அதிகரித்தல்.
53. கெசினோ அனுமதிப்பத்திரத்தை இர த்து செய்தல்.
54. சுங்க வரி செலுத்தாமல் மேற்கொள்ளப்படும் எதனோல் வியாபாரத்தை கட்டுப்படுத்தல்.
55. தற்போது இலவச கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள 1.7% வரையான ஒதுக்கீட்டை 6% வரை இலக்கை நோக்கி நகர்தலை ஆரம்பித்தல்.
56. உயர் கல்வி அமைச்சரினால் கைப்பற்றப்பட்டுள்ள பல்கலைக்கழக அதிகாரத் துவத்தை மானியங்கள் ஆணைக்குழு வின் ஊடாக மீண்டும் பல்கலைக்கழகங்களுக்கு பெற்றுக்கொடுத்து அரசியல் தீர்மானத்திற்கு உட்பட்டுள்ள பல்கலைக்கழகத்தை அதிலிருந்து மீட்டல்.
57. பல்கலைக்கழக மஹாபொல புலமைப்பரிசிலை ரூபா 5000 வரை அதிகரித்தல்.
58. உயர் தரத்தில் மூன்று பாடங்கள் சித்தியடைந்த அனைவருக்கும் உயர் டிப்ளோமாஅல்லது பட்டப்படிப்பு வரை கல்விகற்க தேவையான அவகாசத்தை வழங்குதல்.
59. பாடசாலைகளில் முதலாம் ஆண்டுக்கு பிள்ளைகளை இணைத்துக்கொள்ளும் போது சாதாரண,முறையான திட்டத்தை உருவாக்குதல். முதலாம் ஆண்டுக்கு அனுமதிக்கும் போது தற்போது அசாசாதாரணத்திற்கு ஆளாகியிருக்கும் பிள்ளைக்களுக்கு உதவியளித்தல்.
60. பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்ளீர்க்கும் போது தற்போது உள்ள தாமதத்தை முற்றாக இல்லாமல் செய்து முதலாம் தவணை ஆரம்பமாகும் போது அனைத்து பிள்ளைகளுக்கும் பாடசாலை அனுமதியினைப் பெற்றுக் கொடுத்தலை சான்றுப்படுத்தல்.
61. பாடசாலைகளில் சமயத்தை போதிக் கும் சுற்றுநிருபத்தை அனைத்து பாடசாலைகளிலும் செயற்படுத்தல். அவ் வேலைத்திட்டத்தை ஆராய்ந்து பார்ப்பதற்கு அனைத்து மத பிரதிநிதிகளையும் உள்ளடக்கியதான குழுவை நியமித்தல்.
62. சர்வதேச பாடசாலைகளை அரச கண்காணிப்புக்கு உட்படுத்தல்.
63. மீன்பிடி படகு, வளை மற்றும் படகு எஞ்சினுக்கு தற்போது விதிக்கப்படும் அதிக வரியை அகற்றுதல்.
64. வெளிநாட்டு மீன்பிடி படகு இலங்கை கடல் எல்லையை கடப்பதை கட்டுப்படுத்தல்.
65. இறைச்சி ஏற்றுமதிக்கு அற்றுப்போயுள்ள ஐரோப்பிய சந்தையை மீண்டும் பெற்றுக்கொள்ளுதல்.
66. காற்று மற்றும் கடலில் ஏற்படும் அசாதாரண நிலை தொடர்பில் சரியான தகவலை உடனடியாக மீனவருக்கு பெற்றுக்கொடுக்க கூடிய காலநிலை அவதான வேலைத்திட்டத்தை தயாரித் தல்.
67. மூடப்பட்டுள்ள கால்வாய் கட்டமைப்பை மீண்டும் புனர் நிர்மாணம் செய்தல்.
68. குளங்களில் உள்ள சேற்றை அகற்றுதலை ஆரம்பித்தல்.
69. தற்போது புல் வெட்ட, வீதிகளை சுத்தப்படுத்த, ஓடைகளை சுத்தப்படுத்த பயன்படுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரை அதிலிருந்து மீட்டு முப்படையை இராணுவ வேலைக்கு மாத்திரம் ஈடுப்படுத்தல்.
70. அரசியல்மயமாகியுள்ள பொலிஸ் பதிவி உயர்வு வழங்கும் முறையை நீக்கி வினைத்திறன்,இயலுமை,திறமை,அர்ப்பணிப்பு மற்றும் செயற்பாட்டின் பிரகா ரம் பதவிஉயர்வை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்தல்.
71. உப பொலிஸ் சேவையின் அதிகாரிகள் … சேவைக்கு உள்வாங்கப்படும் போது அது வரை சேவையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கு ஏற்படும் பாதிப்பை நிறைவுசெய்தல் மற்றும். சேவையின் அதிகாரிகளின் சிரேஷ்டத்துவத்தை பாதுகாக்க தேவையான திட்டத்தை முன்னெடுத்தல்.
72. அமைச்சர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பாதுகாப்புக்காக முப்படையினரை ஈடுபடுத்தலை உடனடியாக நிறுத்துதல் மற்றும் சட்ட முறைமையிலான பொலிஸ் பாதுகாப்பை அவர்களுக்கு வழங்குதல்.
73. தோட்டப்புற மக்கள் தற்போது வாழும் வறுமையான லயன் அறை வாழ்க்கையிலிருந்து மீட்டு அவர்களுக்கு காணி உரிமையுடன் வீட்டு உரிமையை பெற்றுக்கொடுத்தல்.
74. பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகாலை போன்ற மாவட்டங்க ளில் தோட்டப்புற மக்களின் பிள்ளைகளுக்கு தமிழ் மொழி மூலம் உயர் கல்வியை தொடரக்கூடிய வகையில் வசதியுடன் பாடசாலைகளை ஆரம்பித்தல்.
75. சட்டவிரோதமான முறையில் தமது வீடுகளில் மற்றும் காணிகளில் பல்வேறு காரணிகளுக்காக வெளியேற்றப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கு தல்.
76. கொழும்பு நகரில் வீடு மற்றும் காணி அபகரிக்கப்பட்ட மக்களின் அச் சொத்தை மீள் மதிப்பீடு செய்து அதன் பெறுமதிக்கு தற்போது வழங்கப்படும் வீட்டு கடனில் கழித்தல்.
77. வீட்டு வசதியின்றி வாழும் இலட்சக்கணக்கான மக்களுக்கு வீட்டு வசதி வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்தல்.
78. வடக்கிலும் தெற்கிலும் ஜனநாயக ரீதியான சிவில் நிர்வாகத்தை செயற்படுத்தல்.
79. மதரீதியாக பாகுபாடுகள் மற்றும் மதரீதியாக வன்முறைகளை கட்டுப்படுத்த சட்டரீதியான நடவடிக்கை எடுத்தல்.
80. மத வழிபாட்டு தலங்களுக்கு தேவையான காப்புறுதியினை வழங்குதல்.
81. மத ஒருமைப்பாட்டுக்காக செயற்படும் மற்றும் பிரிவினை வாதத்திற்கு எதிராக நேரடியாக நடவடிக்கை எடுக்கும் மதத் தலைவர்களை உள்ளடக்கிய பிரதேச மற்றும் தேசிய சபையை ஸ்தாபித்தல்.
82. தொல்பொருள் நிலையங்களை பாதுகாத்தலுக்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்தல்.
83. ஸ்ரீ தலதா மாளிகை உள்ளிட்ட புண்ணிய பிரதேசங்களை அண்டிய பிரதேசத்தில் நடத்தப்படும் மதுபான சாலை களை அவ்விடத்தில் இருந்து அகற்றுவதுடன் அவ் புண்ணிய பூமியை சுற்றிகார் பந்தய போட்டி நடத்துவதை உடனடியாக நிறுத்துதல்.
84. திட்டமிடப்பட்டுள்ள பௌத்த விகா ரை மற்றும் தேவாலய சட்டமூலத்தில் மாற்றத்தை கொண்டுவருதல்.
85. சம்பிரதாய பிரிவென கல்வியை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்துதலுக்காக மற்றும் அறிநெறிபாடசாலை ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்காக செயற்றிட்டங்களை ஆரம்பித்தல்.
86. சர்வதேச பௌத்த பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பதற்கு தேவையான அடித்தளத்தை இடுதல்.
87. மிருக வதையை தடுப்பதற்கு சட்ட ரீதியான நடவடிக்கை.
88. பொருளாதார, சமூக அபிவிருத்தி, மனித உரிமை மற்றும் நல்லாட்சி போன்ற துறைகளுக்கு பொருத்தமான மக்கள் அமைப்புகளுக்கு தமது நடவடிக் கையை மேற்கொள்வதற்கு தற்போது உள்ள கட்டுப்பாட்டை அகற்றுதல்.
89. அனைத்து கலைஞர்களின் படைப்பை மதிக்கும் மற்றும் சுயாதீனத்துவத்தை பாதுகாக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தல்.
90. அனைத்து வெகுசன ஊடகவியலாளர் களின் மற்றும் நிறுவனங்களின் சுதந்திரத்தை பாதுகாக்கும் குறுகிய மற்றும் நீண்டகால வேலைத்திட்டத்தை ஆரம் பித்தல்.
91. கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தை பாதுகாத்தல்.
92. பாராளுமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்தல்.
93. சர்வதேச யுத்த குற்றச்சாட்டுக்கு நீதிமன் றம் உருவாக்கிய ரோம் ஒப்பந்தத்திற்கு இலங்கை கையெழுத்து இடாததனால் அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் ஏற்படு மாயின் அதனை தேசிய சுயாதீன நீதி மன்றத்தின் கீழ் மேற்கொள்ளுதல்.
94. முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மற்றும் 43 ஆவது பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க உள் ளிட்ட அரசியல் பழிவாங்கல் மற்றும் தண்டனைக்கு உள்ளானவர்களுக்கு பறிபோன பதவிகள் மற்றும் உரிமைகளை மீண்டும் பெற்றுக்கொடுத்தல.
95. கௌரவமிக்க வெளிநாட்டு சேவையை மீண்டும் ஸ்தாபித்தல்.
96. தேசிய வனாந்தரமாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ள வனாந்தரங்களை பாதுகாத்தல் அதன் எல்லையை பாது காத்தல்.
97. அழிவடைந்து வரும் பிரதேசங்களை பாதுகாத்தல்.
98. அழிவடைந்து வரும் மற்றும் அழி வடைந்த பிரதேசங்களை பாதுகாக்க நவீன விஞ்ஞான முறைமைகளை பயன் படுத்தி அவற்றை மீண்டும் புனருத்தா ரணம் செய்தல்.
99. மிருக சட்டமூலத்தை பயமின்றி மற் றும் கட்சிபேதமின்றி கடுமையாக நடை முறைப்படுத்தல்.
100. அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் சுற்றாடல் பாதிப்பு தொடர்பாக முன்னுரிமை வழங்குதல்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, January 10, 2015
ஜானதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் தேர்தல் விஞ்ஞாபனத்துடனான 100 நாள் வேலைத்திட்டங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கவிக்கோ அப்துல் ரஹ்மான் பவள விழா (75ஆம் ஆண்டு) தொடக்க உரையின் போது பொழிந்த கவி...
-
நிந்தவூர் அல்-ஈமான் அழைப்பு வழிகாட்டல் நிலைய ஜனாஸா குழுவிற்கான பயிற்சிக் கருத்தரங்கு நேற்று செவ்வாய்க் கிழமை (08-04-2014) அல்-ஈமான் அ...
-
தானே,குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, நண்பனின் மனைவியை கற்பழித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மயக்க மருந்து ...
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
No comments:
Post a Comment
Leave A Reply