எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை கட்சிகளின் இனவாதபேச்சுக்களுக்கு சிறுபான்மை மக்கள் ஒருபோதும் இடமளிக்க கூடாது என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் கிழக்கு மாகாண சமூக பொருளாதார அபிவிருத்தி குழுத் தலைவரும் அக் கட்சியின் உச்சபீட உறுப்பினருமான MCஅஹமட் புர்க்கான் JP அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
எமது நாட்டில் தீவிரமடைந்து வருகின்ற முஸ்லிம்களின் மீதான மதப்பயங்கரவாத சூழ்நிலைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பான ஒரு கட்டமைக்கப்பட்ட செயற்பாடு எம்மிடம் இல்லாதிருக்கின்றமை மேலும் எம்மைப் பலவீனப்படுத்திக் கொண்டே செல்கின்றது.
பொதுவாக சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எடுப்பதில் ஒருமித்த கருத்துக்களையோ ஒன்றுபட்ட முடிவுகளையோ எடுத்துச் செயற்படுவதில் எமக்குள் பல்வேறுபட்ட முரண்பாடுள்ள அமைப்புக்களை நாங்கள் கொண்டிருக்கின்றோம்.
இஸ்லாமிய மத அமைப்புக்கள் கொள்கை ரீதியிலான பிரிவினைகளை முதன்மைப்படுத்தி ஒன்றுபடாமல் முரண்படுகின்றன.
சில அரசியல்வாதிகள் சுயநல அரசியலையும் கட்சி அரசியலையும் வளர்த்துக்கொண்டு அரசியல் வியாபாரம் செய்கின்றனர்.
எமது சமூகத்தில் இருக்கின்ற கல்விமான்கள், புத்திஜீவிகள் தானும் தன்பாடும் என்று எதிலும் பற்றற்று, எதற்காகவும் தன் கௌரவத்தை பாதித்துவிக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கின்றார்கள்
நமது சமூகம் சார்ந்த அக்கறைகளை எந்த தரப்பினர்கள் முன்னெடுக்க வேண்டுமோ அந்த தரப்பினர்களை முதலில் சீர்படுத்த வேண்டியதொரு துர்ப்பாக்கிய நிலையிக்கு இன்று நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.
இவ்வாறானதொரு பலவீனமான சமூகக்கட்டமைப்பைக் கொண்டிருக்கும் நாம் எமது நாட்டில் தற்போதைய காலகட்டத்தில் எங்களுக்கு எதிராக எழுகின்ற வன்முறைகளுக்கு எவ்வாறான வழியில் தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என்பதில் சிந்தனைகளையும் அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளையும் முன்னெடுத்துச் செல்லல் அவசியமாகும்.
ஆளும் அரசாங்கத்தினால் எமது சமூகத்தின் பிரச்சினைகளுக்கான முழுமையான அரசியல் தீர்வொன்றினை காண்பது முடியாத காரியமாகவேயுள்ளது. கடந்த காலங்களில் எம்மால் தெரிவு செய்யப்பட்ட சில முஸ்லிம் அரசியல் வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சோரம் போனதன் விளைவுதான் எம் சமூக மக்கள் மீதான நாசகாரச் சதிகாரர்களின் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரிக்க காரணமாகும்.
இதனை அறிந்தும் ஆட்சியாளர்களிடம் முதுகை வளைந்து கொடுக்கும் முஸ்லிம் அரசியல் வாதிகளால்தான் தொடர்ந்தும் இப்பிரச்சினைகளுக்கான தீர்வினை அரசியல் ரீதியாகப் பெற்றுக்கொள்வதில் நாம் பல நசுக்குதல்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றோம்.
இந் நிலையில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலானது சிறுபான்மையர்களான எமக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தாலாகும்.
இத்தேர்தலின்முடிவுகள் மூலமாக எமக்கான விமோஜனத்தினை பெற்றுக் கொள்ளும் அதே வேளையில் இந் நாட்டின் இனவாதபோக்குக்கு ஒரு முடிவாக அமையவேண்டுமே தவிர ஒரு போதும் வெற்றியாக அமைந்துவிடக் கூடாது என்பதில் சிறுபான்மையரான நாம் விழிப்புடன் இருத்தல் காலத்தின் தேவை கருதி நிற்கின்றது.
யுத்தத்தை முதலீடாக வைத்து அரசியல் செய்தவர்கள் இன்று இனவாதத்தினை முதலீடாக வைத்திருக்கிறார்கள்.
எந்தக் கட்சியாக இருந்தாலும் இனவாதத்துடன்தான் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை ஆனால் அது தன் இனத்தைப் பாதுகாப்பதற்கான வாதமாக இருக்க வேண்டுமே தவிர மற்ற இனத்தை அழிப்பதற்கான ஒரு சாதனமாக இருந்துவிடக்கூடாது.
ஆனால் இன்று நாட்டிலிருக்கின்ற பெரும்பான்மை இனத்தின் அரசியல் வாதங்கள் சிறுபான்மை இனங்களை அழிப்பதற்கான சாதனமாகத்தான் இருக்கின்றது என்ற அச்சத்தினை தோற்றுவிக்கின்றது.
இந்நிலையில் பெரும்பான்மைச் சமூகம் கொண்டுள்ள இனவாதச் செயற்பாடுகளை எதிர்கொள்வதில், தேர்தல் பிரச்சார மேடைகளில் மட்டும் அதனை விமர்சித்துவிட்டு பின்னர் அதை அவ்வாறே கைவிடுவதில்தான் சிறுபான்மை அரசியல்வாதிகள் தவறுவிடுகின்றார்களா? இல்லை; அரசியல் என்பது தேர்தல் பிரச்சார மேடைகளில் பேசுவது மட்டும்தான் என்ற நிலைக்கு மக்கள் சிந்திப்பதாக நினைத்து தேர்தல்காலங்களில் பிரச்சாரங்களில் மட்டும் பேசிவிட்டுப் போகின்றார்களா?
இவ்வாறு இனவாத பிரச்சார அரசியல் மேலெழுந்து நிற்கும் நிலையில் முஸ்லிம் அரசியலில் அறிவுபூர்வமான பிரச்சாரங்களை நோக்கிச் சிந்திக்க வேண்டிய அவசியத்தை முஸ்லிம் சமூகக் கட்சிகள் உருவாக்கி கொள்ள வேண்டும்.
இனவாத பிரச்சாரங்களை மேற்கொள்வதில் மேலும் மேலும் நாங்கள் எங்களுக்கான ஆபத்துக்களைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்து பொறுப்புடன் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். வாக்குகளைப் பெறுவதோடு தேர்தல் முடிந்துவிடும்.
ஆனால் பிரச்சாரங்களில் பேசுகின்ற இனவாதங்கள் முடியாமல்,
அது ஆட்சியோடு தொடாந்து வரும் என்பதை இனவாதம் பேசும் சிறுபான்மை அரசியல் கட்சிகள் யாராக இருந்தாலும் இவ்விடயத்தை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் .
சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை உரிய நேரத்தில் உரிய தரப்பினரிடம் பேசாமல் வாய் மூடி மௌனிகளாக இருந்துவிட்டு தேர்தல் ஒன்று வருகின்ற போது மாத்திரம் சமூகத்தின் காவலர்களாக பிரச்சார மேடைகளில் முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டும் வகையில் வாய் கிழியக் கதறுவது வெறும் அரசியல் வேஷமே தவிர அதில் சமூக அக்கறை சிறிதளவும் இல்லையென்பதை முஸ்லிம் சமுகம் புரிந்து கொள்ள வேண்டும் அதுமட்டுமல்லாமல் முஸ்லிம்களின் பிரச்சினைகளை தேர்தல் மேடைகளில் பிரச்சாரங்களாகப் பேசுவதில் எந்தப் பயனுமில்லை.
தீர்வுகாணவேண்டிய இடங்களில் அவற்றைப் பேசி அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்துவிட்டு அதுபற்றி மார்தட்டி பிரச்சார மேடைகளில் பேசினால் அது வரவேற்கத்தக்க கூடிய விடயமாகும்.
ஆனால் வாக்குகளுக்காக மட்டும் முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஒவ்வொரு மேடைகளிலும் பேசி வறுமைப்பட்ட அரசியல் நடத்துவதை முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் அனுமதிக்க கூடாது.
அதைவிடுத்து தங்களது அரசியல் கொள்கைகளையும் தங்களது கட்சியின் அரசியல் நடவடிக்ககைகளையும் பேசுகின்ற பிரச்சார மேடைகளை இனிவரும் காலங்களில் மக்கள் உருவாக்க வேண்டும்.
ஏனென்றால் அரசியல் பிழப்பு நடத்துகின்ற சில வங்குரோத்து அரசியல் வாதிகள் தங்களுடைய பிரச்சார மேடையில் மக்களின் பிரச்சினைகளை இனவாதமாகப் பேசிப் பேசி இதுவரை காலம் நடந்ததெல்லாம் பெரும்பான்மை தீய சக்திகளை மேலும் வன்முறை நடவடிக்கைகளுக்கு கை தட்டி அழைத்ததுதான்.என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, December 21, 2014
இனவாதபேச்சுக்களுக்கு சிறுபான்மை மக்கள் ஒருபோதும் இடமளிக்க கூடாது - MCஅஹமட் புர்க்கான் JP
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியொன்று நேற்று முன்தினம் இடம்பெற்றது. ப...
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....
-
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யவென இன்று (10) தொடக்கம் விசேட வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸ் திணை...
-
கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் பெய்த அடை மழையினால் 15 பேர் உயிரிழந்ததுடன் 4820 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 15ற்கும்...
No comments:
Post a Comment
Leave A Reply