blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, December 22, 2014

சம்மாந்துறை பிரதேச, திவிநெகும பயனாளிகள் ஜனாதிபதி மஹிந்தவை ஆதரிப்பதாக தீர்மானம்!!!

அகில இலங்கை திவிநெகு அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின்  ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச திவிநெகும குடும்பங்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஆதரித்து ஏற்பாடு செய்யப்பட்ட பிரச்சாரக் கூட்டம் சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அகில இலங்கை திவிநெகு அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான ஜெகத்குமார, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், அகில இலங்கை திவிநெகு அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் அம்பாறை மாவட்ட தலைவர் ஏ.எச்.ஏ.வஹாப், ஜனாதிபதி செயலக தொழிற்சங்க இணைப்பாளர் பந்து ஜயசேன, உட்பட திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பலரும் கலந்த கொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அகில இலங்கை திவிநெகு அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான ஜெகத்குமார உரையாற்றுகையில்,
வருமானம் குறைந்த மக்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்து அவர்களை தன்மானமுள்ள சிறந்த பிரஜைகளாக்க மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பாரிய உதவிகளை செய்துள்ளது.
மஹிந்த ராஜபகஷ ஜனாதிபதியவர்கள் தமது ஒவ்வொரு வரவு செலவுத்திட்டத்திலும் இந்த ஏழை மக்களுக்கு அவர்களின் வாழ்வாதார செயற்பாடுகளுக்கும் உட்கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கும் கூடுதலான பணங்களை ஒதுக்கீடு செய்து வந்துள்ளார்.
அதே போன்று இந்த வரவு செலவுத் திட்டத்திலும் திவிநெகும குடும்பங்களின் கொடுப்பனவுத் தொகைகள் பலமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளன. அத்தடன் 'இசுருமத் நிவச' வளமான இல்லம் வேலைத்திட்டத்தின் கீழ் திவிநெகும பயனாளி குடும்பங்களுக்கு வீடுகளை திருத்த மூன்று கட்டங்களில் 10 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டு வருகின்றன. இதே போன்று இன்னு பல உதவிகள் செய்யப்படவுள்ளன.
இவ்வாறான வசதி வாய்ப்புக்களை வழங்கி வருகின்ற மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி அவர்களை மீண்டும் ஜனாதிபதியாக்க நாம் அனைவரும் ஒன்று திரளவேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து மண்டபத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பயனாளிகள் எழுந்து நின்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே எமது வாக்குகள் என்று கோஷமிட்டனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►