blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, December 22, 2014

'நிகழ்கால வாக்குறுதிகளை ஏற்றுக்கொள்வது, முஸ்லிம்களுக்கான நிரந்தரத் தீர்வாக அமையாது' - அஹமட் புர்கான் JP

ஜனாதிபதியின் நிகழ்கால  வாக்குறுதிகளை ஏற்றுக்கொள்வது, முஸ்லிம்களுக்கான நிரந்தரத் தீர்வாக அமையாது, தனது ஆட்சியின் இனவாத போக்கினை கண்டித்து  தடுக்காமல் திரைமறைவில் தனது முழு ஆதரவு  வழங்கிய  ஜனாதிபதி தற்போது
தேர்தல் காலம் என்பதால் ஆட்சியை தனதாக்கி   கொள்வதற்காக வழங்கப்படும் போழியான  வாக்குறுதிகளை நம்பி  முஸ்லிம் சமூகம் ஏமாறாமல் விழிப்புணர்வுடன் இத் தேர்தலை எதிர் கொள்ள வேண்டும் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் கிழக்கு மாகாண சமூக பொருளாதார அபிவிருத்தி குழு தலைவரும் அக்கட்சியின் சிரேஷ்ட பேச்சாளருமான அஹமட் புர்கான் JP தெரிவித்துள்ளார்.

இன்றைய சூல்நிலையில்  முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க முன்வந்தாலும், வராவிட்டாலும் முஸ்லிம் சமூகம்  மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க வேண்டும் என்றதொரு கட்டாய கடமையில்லை என்பதை  நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தங்களுடைய அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக   அன்று  பயங்கரவாதத்தை மூலதனமாக கொண்டவர்கள் இன்று  இனவாதத்தை விதைத்து அதன் மூலமாக தமது இலக்கை அடைய பல உபாயங்களை கையாண்டு வருவதும் நாம் அறிந்ததே.

தம்புல்லை பள்ளிவாயலில் தொடங்கி அளுத்கம பேருவளை வரை நடந்த அட்டூளியங்களை கண்டித்து அன்றே இந்த அரசை விட்டு வெளிநடப்பு செய்யாமல் வாய்மூடி மௌனிகளாக இருந்தவர்கள்  மக்களின் மனக்குமுறல்களுக்கு செவிசாய்க்காத செவிடர்களாய் பதவி மோகத்தில் சிலாகித்தவர்கள் இன்று சமூகத்தின்  மனநிலையை புறிந்து சுதாகரித்து  செயற்படுகிறார்கள் செயற்படுவார்கள் என்று நம்பிக்கை கொள்வது மடமையாகும்.

ஏனெனில் இது தேர்தல் காலம் என்பதை விட அரசியல் அறுவடை காலம் என்பதே பொருத்தமானதாகும்.  இன்று முஸ்லிம் சமூகம் தனது முடிவிலும் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டிலும் மிக உறுதியாக இருப்பதை உணர்ந்த சில முஸ்லிம் கட்சிகள் தங்களின் எதிர்கால அரசியல் சந்தேகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதை உணர்ந்து  மக்கள் எம்மை ஓரம் கட்டிவிடுவார்களோ என்ற அச்சத்தில் அதிரடி மாற்றம் என்ற பெயரில் தங்களுடைய இருப்பிடங்களை விட்டு புதிய விலாசம் தேடுவது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை அடுத்து வரும் பொதுத் தேர்தலை இலக்கு வைத்தே தவிர வேறொன்றும் இல்லை என்பதை முஸ்லிம்  சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

அன்று அற்ப சொற்ப சலுகைகளுக்காக சிறுபான்மை சமுகத்தின் முதுகெலும்பை முறிக்கும் திட்டத்த்தில் ஆளும் அரசால் கொண்டுவரப்பட்ட 18ம் திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றுத் துரோகமும் சமூகத்திற்காக குரல் கொடுப்பவர்களுக்கு கழுத்தறுப்புகளை செய்து பின்கதவால் சென்று நக்குண்னும் பதவி வெறியர்களையும் வைத்து அரசியல் செய்யும் இவர்களால் எவ்வாறான விளைவுகளை  சமூகம் சந்தித்துள்ளது என்பதை வெரும் பேச்சளவில்  நிறுத்திவிடாது சிந்தையில் ஏற்று செயல்பட வேண்டியதொரு இக்கட்டான காலகட்டத்தில் முஸ்லிம் சமூகம் தள்ளப்பட்டுள்ளது என்பதை சிந்தித்து சமூகத்தின் விடுதலைக்காக ஒற்றுமை எனும் கயிற்றை பலமாக பிடித்துச் செயல்படும் தருணமாக இந்த தேர்தலை முஸ்லிம் சமூகம் உபயோகித்துக்கொள்ள வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►