நமது வீட்டுக் குழந்தைகளுக்கு, யார்
அவர்களைத் தொடலாம் மற்றும் எப்போது தொடலாம் என்று புரிய வைக்க வேண்டியது
அவசியம். குட் டச் (Good Touch), பேட் டச் (Bad Touch) மற்றும் எது ரைட் டச் என்றும் அவர்கள் அறிய
வேண்டியது அவசியம்.
ஒருசில வேளைகளில் மருத்துவர் தொட வேண்டி வரலாம். அல்லது
நாம் அவர்களை சுத்தம் செய்ய வேண்டியிருப்பின் தொட வேண்டி வரலாம்.
ஆனால்,
பள்ளியிலோ அல்லது மற்ற வெளியிடங்களிலோ யாரும் அவர்களை தொட வேண்டிய
அவசியமில்லை என்பதை உணர்த்த வேண்டும். அப்படி யாரும் தொட
முயற்சிப்பார்களேயாயின், உடனடியாக அகன்று அவர்கள் பெற்றோர்களிடம் / முதலில்
எதிர்படும் பெரியவர்களிடமோ சொல்ல வேண்டும்.
ஆனால் இதையெல்லாம் சொல்லி
அநாவசியமாக குழந்தைகளை கலவரப் படுத்தி விடக் கூட்டாது என்பதுடன்
குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள் பற்றிய
தகவல்களிவை….!!
1. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.
2. இரண்டு அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் நாம் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும்.
3.குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய கணவன் என்றோ,மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில் பதிய வைப்பதோ தவறு.
4.
குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே
இருக்கட்டும். மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும்
கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல்
துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.
5. உங்கள் குழந்தையால்
சரியாக பொருந்தியிருக்க முடியாத நபரை ஒருபோதும் சந்திக்க
அனுமதிக்காதீர்கள்..அல்லது அவரிடம் அழைத்துச் செல்லாதீர்கள்.
6.
சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய ஒரு குழந்தை திடீரென்று களையிழந்துவிடும்போது
பொறுமையாக அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டு அவர்களின் பிரச்சனை
என்னவென்று கேட்டறிய வேண்டும்.
7. வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும் அதன் நன்மதிப்பீடுகளை பக்குவமாக கற்பியுங்கள்.
இல்லையென்றால், சமுதாயம் அவர்களுக்கு அதைப் பற்றிய தீய மதிப்பீடுகளைக் கற்றுக் கொடுத்துவிடும்.
8.குழந்தைகளுக்கு தேவையானவற்றை அவர்களுக்கு முன்பாக நாம் அறிந்து கொண்டு அவர்கள் கேட்பதற்கு முன்பாக நாமே வாங்கிக் கொடுத்துவிட வேண்டும்.
9. தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற சேனல்களை
பேரண்டல் கன்ட்ரோல் மூலம் செயலிழக்கச் செய்துவிட்டோமா என்பதை உறுதிப்
படுத்திக் கொள்வது நல்லது.
மேலும், குழந்தைகள் அடிக்கடி செல்லும் நம்
நண்பர்களின் வீடுகளிலும் இதை செய்து வைக்க அறிவுறுத்துவது நல்லது.
10.
3 மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள் உடலின் அந்தரங்கப்
பகுதிகளை சுத்தம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப் பகுதிகளை
பிறர் யாரும்
தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும்.
நீங்களும் அந்த வேலையை செய்யக் கூடாது. ஏனென்றால்,அவசியமற்ற உதவிகளை செய்யும் போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது
11.
குழந்தையை அச்சுறுத்தக் கூடிய அல்லது அவர்களின் மனநிலையை
பாதிக்கக்கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும். இதில் இசை, படங்கள்,
நண்பர்கள் மற்றும் குடும்பங்களும்
அடங்கும்.
12. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது உங்கள் குழந்தையின் தனித்துவத்துத்தை அல்லது தனித் திறமையைப் புரிந்து கொள்ளச் செய்யுங்கள்.
13.
குழந்தை ஒருவரைப் பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக் கூறினாலே,அதை கவனிக்கத்
தொடங்குங்கள். கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம். நீங்கள் அதற்காக
நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள்.
மேலே சொன்னது யாவும் ஞாபகம் இருக்கட்டும்;
அது நாம் பெற்றோராக இருந்தாலும் சரி அல்லது பெற்றோராகப் போகிறவராக இருந்தாலும் சரி!
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் வருட மாணவன் ஒருவர் விடிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்படுகின்றது.
-
இஸ்லாமாபாத்,பாகிஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்ட விமானப்படைக்கு சொந்தமான விமானம் நொறுங்கி விழுந்ததில் 2 விமானிகள் இறந்தனர். தலைநகர் இஸ்லாமா...
-
ஆசிரியர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டியில் கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் உடற்கல்வி ஆசிரியர் ஐ.எல்.எம்.ஜின்னா தங்கப்பதக்...
-
"மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாக வருவதற்கு சட்டம் இடமளிக்காது" - இவ்வாறு முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெ...
No comments:
Post a Comment
Leave A Reply