நீதித்துறையின் சுயாதீனத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தலையிடவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
தற்போதைய அரசாங்கம் நாட்டின் சட்டத்தை பாதுகாப்பதற்கு முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் நீதித்துறையில் தலையிடுவதாக ஒருசில் பொய் பிரசாரங்களை மேற்கொள்வதாக ஜனாதிபதி கூறியுள்ளர்.
மனித
உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் சிலரை
கொழும்பில் நேற்று சந்தித்தபோது ஜனாதிபதி இந்த கருத்துக்களை
வெளியிட்டுள்ளார்.
சட்டத்தை அனைவருக்கும் சமமான முறையில்
நடைமுறைப்படுத்தி சமாதானத்தை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன்
செயற்படுவதாகவும் இதன்போது ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதேவேளை, கொழும்பு பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உரையாற்றினார்.
"மயூரா
பிளேஸில் நாம் மாடிக்குடியிருப்புகளை நிர்மாணித்தோம். அங்குள்ளவர்களை
அங்கிருந்து தூர இடங்களுக்கு அனுப்பி வைக்கவில்லை.
ஏற்கனவே வசிக்கும்
இடங்களிலேயெ அவர்களை அமர்த்தினோம் என்பதனை நான் தெளிவாக கூறுகிறேன். ஆனால்
தற்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதைகளை கூறுகின்றனர்.
கொழும்பில் இருந்து
வௌயேற்றி அவிஸ்ஸாவளைக்கும் முஸ்லிம் மக்களை அம்பாறைக்கும், தமிழ் மக்களை
யாழ்ப்பாணத்திற்கும் அனுப்பவுள்ளதாக கூறுகின்றனர்.
சேரி வீடுகளை அகற்றும்
எமது செயற்பாட்டினை நிறுத்த வேண்டாம். எனது காலப்பகுதியில் சேரி
வீடுகளுக்கு பதிலாக மக்கள் சிறப்பான குடியிருப்புகளிலேயே வாழ வேண்டும்.
இங்கு காணப்படும் அழகான சூழல் புதிய கட்டடங்களின் நிர்மாணத்தின் மூலம்
மேலும் மாற்றமடையலாம்.
நாடு முன்னேற்றமடையும் போதும், அபிவிருத்தி அடையும்
போதும், சமூகம் முன்னேற்றமடையும் போதும் அதற்கு ஏற்றவாறு ஏனையவர்களும்
தயாராக இருக்க வேண்டும்.
உங்களது பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் சுபீட்சமான
எதிர்காலத்தையும் சிறந்த சூழலையும் உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும்.
பாதுகாப்பான இலங்கையை கட்டியெழுப்ப எட்டாம் திகதி
உங்களது கடமையை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்."
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, December 18, 2014
'முஸ்லிம் மக்களை அம்பாறைக்கும், தமிழ் மக்களை யாழ்ப்பாணத்திற்கும் அனுப்பவுள்ளதாக கூறுகின்றனர்' - ஜனாதிபதி
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
-
சீரற்ற வானிலை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ர...
-
இப்பரீட்சை பரீட்சை திணைக்களத்தினால் சிங்களம்,தமிழ் ஆகிய மொழிகள் மூலம் 2014.08.09 ஆம் திகதி நடாத்தப்படும்.
-
பிரான்ஸில் 14 வயதே ஆன சிறுமி ஒருவர் தனக்கு பிறந்த பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply