blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, December 18, 2014

மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிப்பதன் மூலம் மட்டு - மாவட்ட அபிவிருத்திக்கு தடையாக இருந்து விடக் கூடாது - ஹிஸ்புல்லாஹ்!

கடந்ந ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கில் அநேகமான தமிழ் முஸ்லிம் மக்கள் தோற்றுப்போன சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்து எந்தப் பலனையும் அடையாதது போன்று

இந்த ஜனாதிபதி தேர்தலிலும் தோற்றுப்போகவுள்ள பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிப்பதன் மூலம் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்கு தடையாக இருந்து விடக் கூடாது என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் தமிழ்-முஸ்லிம் வாழ்வின் எழுச்சி திவிநெகும பயனாளிகளுக்கு வீட்டு மானிய உதவி வழங்கும் திட்டத்தில் சுமார் 600 பேருக்கு வீட்டு மானிய உதவிகள் வழங்கும் நிகழ்வில் நேற்று புதன்கிழமை பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேசத்தில் திவிநெகும பயனாளிகள் 450 பேருக்கு வீடு திருத்துவதற்கான முதற்கட்ட மானிய உதவி வழங்கி வைப்பு!

செழிப்பான இல்லம் பிஎனும் தொனிப்பொருளில் வாழ்வின் எழுச்சி திவிநெகும உதவிபெறும் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த வறிய குடும்பங்களுக்கு வீடுகளை திருத்துவதற்கான வீட்டு மானிய உதவி வழங்கும் பணிகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நடவடிக்கையில் துரிதமாக இடம்பெற்று வருகின்றது.

இதற்கமைய காத்தான்குடி பிரதேசத்தில் 1 கோடி 3 இலட்சம் ரூபாய் நிதியில் ஒரு குடும்பத்திற்கு 2500 ரூபாய் வீதம் சுமார் 5300 வாழ்வின் எழுச்சி திவிநெகும பயனாளிகளுக்கும் வீட்டு மானிய உதவி வழங்கும் திட்டத்தில் சுமார் 450 பேருக்கு வீட்டு மானிய உதவி வழங்கும் நிகழ்வு  17-12-2014 நேற்று புதன்கிழமை பிற்பகல் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்கத்தின் காத்தான்குடி பிரதேச திவிநெகும அதிகாரி ஏ.எம். சுல்மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டு மேற்படி 500 பேருக்கு வீட்டு மானிய உதவித் தொகை 2500 ரூபாவை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் பிரதித் தவிசாளர் எம்.ஜெஸீம், வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.எச்.எம். முஸம்மில், காத்தான்குடி பிரதேச வாழ்வின் எழுச்சி திவிநெகும வங்கி முகாமையாளர் ஏ.எல்.செட். பஹ்மி உட்பட திவிநெகும உத்தியோகத்தர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்திலுள்ள உலமாக்களுக்கும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு மிடையிலான விஷேட சந்திப்பு!


ஜனாதிபதி தேர்தல்(2015)  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் முகமாக காத்தான்குடி பிரதேசத்திலுள்ள உலமாக்களுக்கும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு மிடையிலான விஷேட சந்திப்பொன்று காத்தான்குடியில் 17-12-2014 நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்றது.

காத்தான்குடியிலுள்ள  ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு தொகுதி தேர்தல் காரியாலயத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பில் பெருமளவு உலமாக்கள்,கதீப்மார்கள் மற்றும் முஅத்தீன்கள், காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எம்.அஸ்பர்,பிரதித் தவிசாளர் எம்.ஜெஸீம் ,காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான பாக்கீர், ,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் உட்பட கட்சி ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இப் பிரதேச முஸ்லிம்கள் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

இங்கு முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால நலனிற்கு உதவக் கூடிய வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடையப்போகும் வெற்றியில் பங்குதாரர்களாக முஸ்லிம் சமூகம் மாற முடியுமென பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►