இடி அமீனைப்போன்று ஆட்சி செய்யும் மஹிந்தவின் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஏறாவூரில் தெரிவித்தார்.
நேற்று (29) மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூருக்கு விஜயம் செய்த அவர் பொதுக்கூட்டமொன்றில் உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், மஹிந்தவின் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று இப்பொழுது நாட்டு மக்கள் கங்கணம் கட்டி இருக்கின்றார்கள்.
மஹிந்த ராஜபக்ஷ நாட்டை சகட்டு மேனிக்கு அழித்தொழித்தவர்; நீதித்துறை, நிருவாகத்துறை, பொலிஸ்துறை என்று எல்லாவற்றையுமே அழித்து துவம்சம் செய்துள்ளார்.
நாட்டின் நாடாளுமன்ற ஆட்சியை தலைகீழாக மாற்றினார் நாட்டிலுள்ள முப்படையினரையும் தனது குடும்ப நிருவாகத்துக்கு கீழே கொண்டுவந்தார். வர்த்தகத்துறையை தனது குடும்பத்துக்குரியதாக மாற்றினார்.
மஹிந்த ஆட்சியின் கீழ் ஜனநாயகம் பறித்தெடுக்கப்பட்டுள்ளது.
எமது அரசாங்கம் வறுமைக்குரிய மக்களுக்கான அரசாக இருக்கும், நீதித் துறையை வலுப்படுத்தி சிறந்த அரசாங்க நிருவாக சேவையை ஏற்படுத்துவோம்.
விவசாயிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காண்போம், தொழிலில்லாத பத்துலட்சம் பேருக்குத் தொழில்வாய்ப்பு ஏற்படுத்துவோம்.
நான் ஒரு விவசாயப் பின்னணியைக் கொண்டவன் என்கின்ற அடிப்படையிலே எனது அரசாங்கம் விவசாயிகளின் அரசாங்கமாக இருக்கும். மீனவர்களின் நலன்களும் பேணப்படும்.
இது பொதுமக்களின் அரசு. எனது அரசு தனிக்குடும்ப அரசாக இருக்காது. நான் மஹிந்த ராஜபக்ஷ போன்று மன்னராட்சி செலுத்த மாட்டேன்.
அவர் இந்த நாட்டு மக்களின் சொத்துக்களைக் கொண்டு மாடமாளிகைகளைக் கட்டியிருக்கின்றார்.
ராஜபக்ஷவின் குடும்பம் மன்னர்களின் குடும்பங்களைப் போன்று உல்லாசமாக வாழ்கிறது.
இது சிங்கள தமிழ் முஸ்லிம்களின் நாடு, இன மத மொழி வேறுபாடுகளின்றி இந்த நாட்டை ஆள்வோம். ஆகையினால் எல்லோரும் சகவாழ்வுடனும் இன சௌஜயன்யத்துடனும் வாழலாம்.
எல்லோரும் தாம் விரும்பும் மதத்தை அனுசரித்துக் கொண்டு ஐக்கியமாக வாழ முடியும். துஷ்பிரயோகம் செய்கின்ற மஹிந்தவுக்கு வாக்களிக்காமல் சிறந்த முறையில் மக்களாட்சியை கொண்டுவரப்போகும் ஆட்சி மாற்றத்திற்கு வாக்களியுங்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தவிசாளர் ஜயசூரிய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரெட்ன, கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் எம்.எஸ். சுபைர், கிழக்கு மாகாண சபை அமைச்சர் நஸீர் அஹமட் உட்பட இன்னும் அநேகர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தவிசாளரும் உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சரும் ஏறாவூரைச் சேர்ந்தவருமான பஷீர் சேகுதாவூத் இந்தக் கூட்டத்திற்குச் சமூகமளிக்கவில்லை.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, December 30, 2014
'இடி அமீனைப்போன்று மஹிந்த ஆட்சி செய்கின்றார்' - மைத்திரிபால சிறிசேன
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
நைஜிரியாவில் கடத்தப்பட்ட பெண்கள் திருமணத்திற்கென விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போஹோ ஹராம் ஆயதாரிகளால் கடத்தப்பட்...
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....
-
கார் குண்டு வெடிப்புகளில் 25 பொதுமக்கள் பலி பாகிஸ்தான் ரயில் குண்டுவெடிப்பில் 13 பேர் பலி தென் ஆபி...
-
மன்னார், மருதனார்மடு பகுதியில் மிருகவெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply