மாற்றமொன்றை நோக்கிப் பயணிப்பதாயின், அது ஒரு சிறந்த மாற்றமாக அமைய வேண்டுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இத்தாலி, இங்கிலாந்து, ஜேர்மனி, சுவிட்ஸர்லாந்து, நெதர்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பிரதிநிதிகளுடன் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அன்று நீங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதன் பின்னர் கொழும்பு வருவதற்கு ஒன்றரை மணித்தியாலங்கள் தேவைப்பட்டது எனினும் தற்பொழுது 15 அல்லது 20 நிமிடங்களில் வந்துவிடலாம்.
ஆகவே, இதில் மீண்டும் மாற்றம் ஏற்படுத்துவதாயின், அந்த 15 நிமிடத்தை ஒன்றரை மணித்தியாலங்களாக அதிகரித்து விடும். அதுவே நான் காணும் மாற்றமாகும்.
மாற்றமொன்றை ஏற்படுத்தும் போது, அது சிறந்த மாற்றமாக அமையவேண்டும். மாற்றம் அழிவுக்கு வித்திடக்கூடாது. எனவே, நாம் இந்த வேளையில் சிறந்த முறையில் சிந்திக்க வேண்டும்.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இதுபோன்ற மாற்றங்கள் நன்கு புலப்படும். ஐரோப்பாவில் வசிக்கும் உங்களுக்கு இந்த மாற்றங்கள் தொடர்பில் நன்கு தெரியுமென நினைக்கின்றேன்.
எனினும், இலங்கையில் இன்று சிலர் முகப்புத்தகத்தின் ஊடாக மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்து, இதனை மறுபக்கம் திருப்புகின்றனர். இதனையே லிபியாவிலும் செய்தனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
காலி – கிங்தோட்டை பகுதியிலுள்ள கைத்தொழிற்சாலையொன்றில் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
-
பிரதான போதைப்பொருள் கடத்தல் குழுவொன்றின் தலைவர் மெக்ஸகோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இந்திய, கர்நாடக மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் ஜூன் மாதம் பிரேசிலில் ஆரம்பமாக உள்ள நிலையில் இப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தீவ...
No comments:
Post a Comment
Leave A Reply