ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்
ரவூப் ஹக்கீம் ஒரு அரசியல் விபச்சாரி என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்
செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
2005 மற்றும் 2010 ஆகிய தேர்தல்களிலும் ஹக்கீம் எதிர்கட்சி வேட்பாளருக்கே ஆதரவு அளித்ததாக தேரர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் முடிந்ததும் ஹக்கீம் மீண்டும் அரசாங்கத்தில் இணைந்து கொள்வார்
என ஞானசார தேரர் கொழும்பில் இடம்பெற்ற (29) ஊடக சந்திப்பில்
தெரிவித்தார்.
ரவூப் ஹக்கீம் – மைத்திரிபால சிறிசேன இரகசிய உடன்படிக்கை மற்றும்
ஹக்கீம் – சந்திரிக்கா இரகசிய உடன்படிக்கை என்பன வெளிப்படுத்தப்பட வேண்டும்
என அவர் கூறியுள்ளார்.
2002ம் ஆண்டு புலிகள் முஸ்லிம் மக்களை கொன்ற போது ஹக்கீம் பிரபாகரனுடன்
ஒப்பந்தம் கைச்சாத்திட்டதாகவும் நாட்டுக்கு சமாதானம் பெற்றுக் கொண்ட
பயணத்தில் நாட்டுக்காக முஸ்லிம் காங்கிரஸில் எவரும் உயிர்தியாகம்
செய்யவில்லை என்றும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
ரவூப் ஹக்கீம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து சிங்களவர்களுக்கு
எதிராக சர்வதேசத்தில் சூழ்ச்சி செய்தவர் என்று தேரர் சுட்டிக்காட்டினார்.
பாட்டளி சம்பிக்க போன்றவர்கள் அமைச்சரவையில் சத்தமிடாது இன்று
எதிர்கட்சி மேடையில் இருந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக
சத்தமிடுவதாகவும் நாட்டில் இன்று மாற்றம் மாற்றம் என பேசப்படுவதாகவும்
மாற்றம் அழிவின்றி சிறந்ததாக இருந்தால் நல்லதே எனவும் ஞானசார தேரர்
தெரிவித்துள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
காலி – கிங்தோட்டை பகுதியிலுள்ள கைத்தொழிற்சாலையொன்றில் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
-
கூலிக்காக வர்ணம் (பெயின்ற்) பூசச் சென்ற இளைஞர் ஒருவர் அந்த வீட்டிலிருந்த மூன்று பவுண் எடை கொண்ட சங்கிலியை திருடிய சம்பவம் ஒன்று அண்மையில்...
-
பிரதான போதைப்பொருள் கடத்தல் குழுவொன்றின் தலைவர் மெக்ஸகோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இந்திய, கர்நாடக மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply