க.பொ.த.சாதாரண தர பரீட்சை நடைபெற்று முடிவடைகின்ற இக்கால நிலையில் இப்பகுதிகளில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு இது பெரிதும் நேர வீணாக அமைந்ததாக தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதியில் அமைக்கப்பட்டு வந்த வீதி அமைப்பு வேலைகள் இடைநடுவே கைவிடப்பட்டமையே இவ்வீதிகளின் அவல நிலைக்கு காரணமாகும்.
ஒரு மாத காலத்திற்கு மேலாக குறித்த பணி கைவிடப்பட்டு அரைகுறையாக காணப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
சீரற்ற காலநிலை நிலவும் இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறே இது தொடர்ந்தால் என்ன ஆகும் என்பதை பொறுப்பிலுள்ளவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஆகவே, இதற்கு பொறுப்பான அதிகாரிகள் நிலவும் சங்கட நிலைமையினை கருத்திற்கொண்டு உரிய நடவடிக்கைகளை பெற்றுத் தர வேண்டியது உமது கடமை.

No comments:
Post a Comment
Leave A Reply