blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, December 19, 2014

இறந்தவர்கள் சொர்க்கத்திற்கு செல்ல விண்ணில் இறுதி சடங்கு: அமெரிக்க நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பம்

மரணம் அடைந்த ஒருவரின் உடலை எரித்து அதன் சாம்பலை புனித நதிகளிலோ அல்லது கடலிலோ கலந்து இறுதி சடங்கு நடத்தும் வழக்கம் பெருமாபாலான இந்துகளிடம் உள்ளது.

இறந்தவர்களின் ஆத்மா இதனால் சாந்தியடையும் என்றொரு நம்பிக்கை உள்ளது.

ஆனால் முதல் முதலாக மரணம் அடைந்த ஒருவரின் உடலை எரித்த சாம்பலை விண்ணில் பரப்ப வணிக ரீதியாக ஒரு நிறுவனம் தொடங்கபட்டு உள்ளது.

அமெரிக்காவில் உள்ள லெக்சிங்டன் மாகாணத்தில் உள்ள கெண்டக்கி என்ற நகரில் அந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

ராட்சத பலூன் மூலம் விண்ணில் எடுத்து செல்லப்படும் சாம்பல் 75,000 அடி உயரத்திற்கு சென்றவுடன் விண்ணில் பரவும்படி இந்த நிறுவனம் செய்கிறது.

ரிமோட் மூலம் பலூனில் உள்ள சாம்பல் விண்ணில் தூவும் ஒரு தொழில்நுட்ப முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கென ஒரு குறிப்பிட்ட தொகை வசூல் செய்கிறது. இறந்துபோன உறவினர் இதனால் நேராக சொர்க்கத்திற்கு சென்றுவிடுவார்கள் என்பது ஒரு நம்பிக்கை.

இந்த புதிய முறைக்கு அமெரிக்காவில் அமோக வரவேற்பு ஏற்பட்டுள்ளது. விண்ணில் பரப்பப்படும் சாம்பலால் சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்குமா?

என்பது குறித்த கேள்விகளும் எழுந்து உள்ளன. இந்த சாம்பல் மழை அல்லது பனித்துளிகளுடன் கலந்து மீண்டும் பூமிக்கு திரும்பும்போது கெடுதல் விளைவிக்குமா? என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது.
http://mmimages.maalaimalar.com/Articles/2014/Dec/813e2a43-f57a-4b5f-8299-c016f6411fb2_S_secvpf.gif

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►