இன்று
நடைபெறவுள்ள மஹாபொல புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வில் பல்கலைக்கழக
மாணவர்கள் கலந்துகொள்வது கட்டாயமானது என உயர் கல்வி அமைச்சு
அறிவித்துள்ளது.இம்முறை மூன்று மாதங்களுக்கான புலமைப் பரிசில் ஒரே தடவையில் வழங்கப்படவுள்ளதாகவும், அதில் கலந்துகொள்ளாத மாணவர்களுக்கு அவை வழங்கப்படாதெனவும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் சுனில் ஜயந்த நவரத்ன கூறினார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான நிகழ்வை ஏற்பாடுசெய்து, அரசாங்கம் நன்மையடைய முயற்சிப்பதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவிக்கின்றது.
அதனால், இந்த நிகழ்வை புறக்கணிப்பதாகவும் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் நஜித் இந்திக்க குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment
Leave A Reply