பிரித்தானியாவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் ரகசிய கமெராவின் மூலம்
குழந்தைகள் மற்றும் நோயாளிகளின் அந்தரங்க உறுப்புகளை படம்பிடித்துள்ளார்.
பிரித்தாயாவின்
பிரபல ரத்த புற்றுநோய் மருத்துவர் மைலெஸ் பிராட்புரி(Myles Bradbury
Age-41) கேம்பிரிட்ஜ்(Cambridge) நகரில் அட்டன்
புருக்ஸ்சில்(Addenbrooke's) மருத்துவமனையை நடத்தி வருகிறார்.
இவரிடம் சிகிச்சை பெற மொத்தம் 18 குழந்தைகள் மற்றும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இவர் மருத்துவமனையில் ரகசிய கமெராக்களை பொருத்தி நோயாளிகள்
மற்றும் அவர்களது பெற்றோர்கள் உடைமாற்றுவதை படம்பிடித்து உள்ளார்.
மேலும் நோயாளிக் குழந்தைகளின் சட்டைப்பையில் பேனா கமெராவை பொருத்தி,
குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் அந்தரங்க உறுப்புகளை படம்பிடித்ததுடன்,
பல குழந்தைகளை பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியும் உள்ளார்.
சுமார் 5 ஆண்டுகளாய் நடந்த இந்த குற்றங்களுக்காக, கடந்த 2013ம் ஆண்டு
டிசம்பர் மாதம் இவரை கைது செய்து வழக்கு பதிவு செய்த பொலிசார்,
இவரிடமிருந்து குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் ஆடையின்றி
இருந்த 16 ஆயிரம் அந்தரங்க படங்களை கைப்பற்றியுள்ளனர்.
இவர் மீதான வழக்கு கேம்ப்ரிட்ஜ் கிரவுன்(Cambridgegrown) நீதிமன்ற
விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதி, மைலெஸ் பிராட்புரிக்கு 22
ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply