இராணுவப் பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
இதேவேளை, தொடர்ச்சியாக காணப்படும் மோசமான காலநிலை
காரணமாக அவ்வப்போது மீட்பு பணிகள் நிறுத்தப்பட்ட போதிலும் தொடர்ச்சியாக
முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சாதகமான காலநிலை நிலவியமையினால் நேற்றைய தினம் மீட்பு
பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்பு மற்றும் சமகால விடயங்கள் தொடர்பாக
ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு
கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக
மையத்தில் இடம்பெற்றது.
இதன் போது பிரிகேடியர் மேலும் விளக்கமளிக்கையில் :-
கொஸ்லந்தையில் இடம்பெற்ற அனர்த்தத்தை அடுத்து இராணுவம்
உட்பட முப்படையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அராசாங்கம்
சகல துறைகளிலும் இந்த மக்களுக்கு தேவையான அடிப்படை செய்து கொடுத்தும்
நிவாரண வசதிகளை தொடர்ச்சியாக வழங்கியும் வருகின்றது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான சகல நடவடிக்கைகளையூம்
அவர்களை நிரந்தரமாக மீளக்குடியமர்த்த பொறுத்தமான காணிகளையும் அடையாளங்
காணுமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு
உத்தரவிட்டுள்ளார். இந்நிலையிலேயே தற்காலிகமாக வீடுகளை அமைக்கும் பணிகளை
இராணுவத்தினர் அம்பிட்டிய பிரதேசத்திலுள்ள பழைய தேயிலை தோட்டம் ஒன்றில்
ஆரம்பித்துள்ளனர் என்றார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட 450 குடும்பங்களைச் சேர்ந்த
சுமார் 1500 மக்கள் கொஸ்லந்த, பூனாகல கனிஷ்ட, சிரேஷ்ட வித்தியாலயம் மற்றும்
சுப்பிரமியம் கோயில் ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் இவர்களில் 63
குடும்பங்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கான
தற்காலிக வீடுகளை அமைக்கும் பணிகளே ஆரம்பிக்கப்பட்டள்ளது என்றார்.
அத்துடன் சம்பவம் நடைபெற்ற இடத்தில் பாதுகாப்பு படையினர்
இது வரை மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைகளின் மூலம் 9 சடலங்களையூம் 3 உடல்
பாகங்களையும் மீட்டெடுத்துள்ளனர்.
மீட்டெடக்கப்பட்ட சடலங்களில் ஆறு
பெண்களும் 3 ஆண்களும் அடங்குவர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply