ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்
கூட்டமைப்பை தோற்கடிப்பதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க
குமாரதுங்க தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுவான ஒர் நோக்கத்தின் அடிப்படையில் செயற்பட சந்திரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளார்.
பயணம் செய்திருந்த சந்திரிக்கா அண்மையில் நாடு திரும்பியிருந்தார்.
பொது வேட்பாளர் ஒருவரைத் தெரியும் முயற்சிகளில்
சந்திரிக்கா முக்கியமான பங்கினை வகிக்க உள்ளதாக ஆங்கில ஊடகமொன்று
தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து சந்திரிக்கா திட்டவட்டமாக எதனையும் அறிவிக்கவில்லை.
இதேவேளை, பொது வேட்பாளரை தெரிவது
குறித்து மாதுலுவே சோபித தேரர் தலைமையில் இன்றைய தினம் விசேட
பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளன. கோட்டே ஸ்ரீ நாக விஹாரையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளராக மாதுலுவே சோபித தேரர் அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஒருவரை பெயரிடுவது குறித்து இன்று தீர்மானமிக்க கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
Leave A Reply