வடபகுதி
கடற்பரப்பினுள் பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு
தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 24 பேரின் விளக்கமறியல்
நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதவான் எஸ்.
லெனின்குமார் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை
தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன் பிரகாரம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த
செப்டெம்பர் மாத இறுதியில் நான்கு படகுகளுடன் மாதகல்லை அண்மித்த
கடற்பரப்பில் கைதான 16 இந்திய மீனவர்கள் யாழ் மாவட்ட கடற்றொழில்
அதிகாரிகளால் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டிருந்தனர்.
இதுதவிர
எரிபொருள் தீர்ந்த நிலையில் நெடுந்தீவில் கரையொதுங்கிய நான்கு இந்திய
மீனவர்களும், அண்மையில் கடும் காற்றினால் கச்சத்தீவு பகுதியில்
கரையொதுங்கிய 4 மீனவர்களும் நெடுந்தீவு பொலிஸாரினால் ஊர்காவற்றுறை
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
தமிழக மீனவர்களின் விளக்கமறியல் மூன்றாவது முறையாகவும் நேற்று நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பிரதிநதியாக, அவரது சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ சீனாவுக்கு விஜயம் செய்துள்ள...
-
ஆசிரியர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டியில் கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் உடற்கல்வி ஆசிரியர் ஐ.எல்.எம்.ஜின்னா தங்கப்பதக்...
-
"மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாக வருவதற்கு சட்டம் இடமளிக்காது" - இவ்வாறு முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெ...
-
கூலிக்காக வர்ணம் (பெயின்ற்) பூசச் சென்ற இளைஞர் ஒருவர் அந்த வீட்டிலிருந்த மூன்று பவுண் எடை கொண்ட சங்கிலியை திருடிய சம்பவம் ஒன்று அண்மையில்...
No comments:
Post a Comment
Leave A Reply