சீகிரிய ஓவியங்களில் வர்ணப் பேனையால் வரைந்தமையால் கைதான கல்முனையைச் சேர்ந்த பாடசாலை மாணவி பிணையில் விடுவிக்கப்பட்டள்ளார்.கல்வி சுற்றுலாவில் ஈடுபட்டிருந்த சந்தர்பத்தில் கடந்த வியாழக்கிழமை குறித்த மாணவி கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
குறித்த மாணவியின் நடவடிக்கைகளை அவதானித்த தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், அவரைக் கைதுசெய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைதான 17 வயதான மாணவி நேற்று மாலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply