வலிகாமம் கல்வி வலயத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களைக் கலந்துரையாடல் என அழைத்து இடமாற்றப் படிவங்கள் வழங்கப்பட்டமையால் அவர்கள் அதிர்ச்சியும் - விசனமும் அடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருவருவதாவது:
வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றது.
இதில் கலந்து கொள்ளுமாறு ஆசிரியர்களுக்கு ஏற்கனவே கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தன.
இந்த கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக வலயக் கல்வி அலுவலகத்துக்கு ஆசிரியர்கள் சென்றபோது கலந்துரையாடல் எதுவும் நடத்தாமல் வன்னிப் பிரதேசத்திற்கான இடமாற்ற படிவங்கள் வழங்கப்பட்டன.
எந்த வகையான திட்டமிடலும் இன்றி ஏற்கனவே வன்னி மாவட்டத்தில் கடமையாற்றியவர்கள், இடமாற்ற வயதைக் கடந்தவர்கள் உட்பட அனைவருக்கும் படிவங்கள் வழங்கப்பட்டன என்றும், இதனால் தாம்அதிருப்தியும் - விசனமும் அடைந்தனர் என்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பிரதிநதியாக, அவரது சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ சீனாவுக்கு விஜயம் செய்துள்ள...
-
ஆசிரியர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டியில் கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் உடற்கல்வி ஆசிரியர் ஐ.எல்.எம்.ஜின்னா தங்கப்பதக்...
-
"மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாக வருவதற்கு சட்டம் இடமளிக்காது" - இவ்வாறு முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெ...
-
கூலிக்காக வர்ணம் (பெயின்ற்) பூசச் சென்ற இளைஞர் ஒருவர் அந்த வீட்டிலிருந்த மூன்று பவுண் எடை கொண்ட சங்கிலியை திருடிய சம்பவம் ஒன்று அண்மையில்...
No comments:
Post a Comment
Leave A Reply