blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, November 10, 2014

ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் மஹிந்த போட்டியிட முடியுமா? முடியாதா? உயர் நீதிமன்றின் முடிவு இன்று!

ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் மஹிந்த போட்டியிட முடியுமா? முடியாதா? உயர் நீதிமன்றின் முடிவு இன்று!மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட முடியுமா? இதற்கு அரசமைப்பில் ஏதாவது தடைகள் உள்ளனவா? என்பவை குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எழுப்பிய கேள்விகளுக்கு உயர் நீதிமன்றம் இன்று பதிலளிக்கும்?

உயர் நீதிமன்றத்துக்கு கடந்த 5 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அனுப்பிய கடிதத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ 10 ஆம் திகதிக்கு முன்னர் தனக்கு இது குறித்து தனக்குத் தெளிவுபடுத்துமாறு கோரியிருந்தார்.

இதேவேளை சட்டத்தரணிகள் தங்கள் கருத்துக்களை நீதிமன்றத்தில் வாய்மூலமாக தெரிவிப்பதற்க்கு வாய்ப்பளிக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும், ஜே.வி.பியும் விடுத்த வேண்டுகோள்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நீதிமன்றத்திற்க்கு சமர்ப்பித்த இரு கேள்விகளையும் தயார் செய்தது பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸும் அவரது நண்பரான மொஹான் ஜெயமகவும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் இருவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் நெருங்கிய நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பிரதம நீதியரசரே அவரது சகாக்களுடன் சேர்ந்து கேள்விகளை வடிவமைத்து வழங்கிவிட்டு பின்னர் அவரே இது குறித்த ஆலோசனைகளையும் வழங்கவுள்ள வேடிக்கையான ஆனால் ஆபத்தான விடயம் இலங்கையில் மாத்திரமே இடம்பெறுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால் இவ்வாறான ஆலோசனைகள் கோரப்படும்போது சுயாதீனமாக, சுதந்தரமாக செயற்படுவதே நீதிமன்றத்தின் கடமை எனினும் மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசராக அவர் நியமிக்கப்பட்டவேளையே அதனது சுதந்திரம் பறிபோய்விட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் ஏழுபேர் கொண்ட நீதிபதிகள் குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு சாதகமான பதிலையே வழங்குவார்கள் என்பது தெளிவாகியுள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►