யாழ்.மாவட்டத்தில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவுறுத்தியுள்ளது.யாழ்.மாவட்டத்தில் கூடிய காற்றுடன் மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகமிருப்பதால் மீனவர்கள் அவதானமாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பான அறிவுறுத்தல்களை மீனவர் சமாசங்கள் ஊடாக விடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply