கொழும்பு கட்டுநாயக்க விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் விமான சேவைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.அரசாங்கத்துக்கு சார்பான தொழிற் சங்கங்கத்தினரே வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வேலை நிறுத்தம் இன்று புதன்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டதாக விமான நிலைய சுதந்திர ஊழியர் சங்கத் தலைவர் பி.முகந்திரம் தெரிவித்தார்.
5 கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
10ஆயிரம் ரூபா சம்பள உயர்வு, வைத்திய காப்புறுதி சேவை, கடன்தொகை வழங்கல், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரியை அகற்றல், ஊழியர்களுக்கு ஓய்வு நேரம் வழங்கல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய சுதந்திர ஊழியர் சங்கத் தலைவர் பி.முகந்திரம் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment
Leave A Reply