தலைவர்
அஷ்ரஃப் மரணிக்க சில வருடங்களுக்கு முன்னர் slmc கட்சியானது தனியாக
முஸ்லிம்களை மட்டுமே அடையாளப்படுத்துவதால் இந்த slmc கட்சிக்கு பதிலாக
பொதுசன ஐக்கிய முன்னணி (NUA) எனும் கட்சியை ஸ்தாபித்து மக்கள் மயப்படுத்த
எத்தனித்தார் என்பதும்
இதன் மூலம் சகலரையும் ஐக்கிய இலங்கையில் ஒற்றுமை
படுத்தவும் முனைந்தார் என்பது சகலரும் அறிந்த ஒன்றே.
இந்த பொதுசன ஐக்கிய
முன்னணி (நூஆ)கட்சிக்கு சின்னமாக புறாவை தலைவர் தெரிவு செய்து மக்களுக்கு
அறிமுகமும் செய்து வைத்திருந்தார் . துரதிஷ்டவசமாக சகல இலங்கை மக்களும்
அஷ்ரஃப் எனும் தலைவரை இழக்க நேரிட்டது.
அந்த மரணத்துடன் தலைவரின் புறாவின்
சிறகுகள் கத்தரிக்கப்பட்டு ஒற்றுமை எனும் வானில் பறக்க முடியாது இனவாத
கூண்டுகளில் அடைத்து வைத்திருந்தனர்.
தலைவர் அஷ்ரஃப்பின் கனவுகளில் ஒன்றான
இன,மத,மொழி,பிரதேச வாதமற்ற ஒற்றுமையான இலங்கையை கட்டியெழுப்ப பாடுபடுதல்
எனும் கனவினை அவரை தொடர்ந்து அந்த தலைவர் ஆசனத்தை கைப்பற்றிய தலைமைகள்
செய்தனவா என்பது கேள்வி குறியே (??).
இது இவ்வாறிருக்க எதிர்வரும் 2015
ஜனவரியில் இலங்கையின் புதிய தலைவரை தேர்வு செய்ய நாடே கொந்தளித்து
கொண்டிருக்கும் போது முஸ்லிம்களின் உரிமை குரல்கள் மௌனம் சாதிப்பது ஏன்?
கோப்புகளா? BBS ஆ? முகத்திரைகள் கிழியும் என்ற அச்சமா?
சிறுபான்மை மக்களின்
ஏகோபித்த கருத்தாகவும் விருப்பமாகவும் இருப்பது ஆட்சி மாற்றம் என்பது
சகலரும் அறிந்த ஒன்றே.
இந்த ஆசைகளுக்கு ஏன் நமது தலைமைகள் தலைசாய்க்க
அச்சபடுகின்றனர் ?
தலைவர் அஷ்ரஃப் போன்ற மக்கள் நல தலைவர்களின் ஆசையை
நிறைவேற்றி மக்களுக்கு நல்லது செய்ய கைகோர்க்கும் இந்த பொது அணியுடைய
சிந்தனைகளை ஏற்க தயங்குவது ஏன்? பதவிகளுக்கும், எட்டாக்
கனீகளுக்கும்,சோரம்போகாத அரசியலை செய்து காட்டிய தலைவரால் வித்திடப்பட்ட
கட்சி அவரால் முன்மொழியப்பட்ட சுதந்திர இலங்கையில் சுபீட்சமான வாழ்க்கைக்கு
பங்குதாரராக வர வேண்டும் என்பது இலங்கை வாழ் பொதுமக்களின் ஆசையாக
உள்ளது.
இந்த ஆசைகளை நிராசைகளாக்காது சகல கட்சிகளும் பொது சனங்களின்
வேட்பாளரான கௌரவ மைத்திரிபால சிரிசேனாவை ஆதரித்து வெற்றியடைய செய்ய பாடுபட
வருமாறு அழைக்கிறேன்.
அத்துடன் நமது தலைவரின் கனவுகளையும் , மக்களின்
அபிலாஷைகளையும் , சிறுபான்மை மக்களின் உரிமைகளையும் வென்றடுக்க நமது தலைவர்
அடையாளம் கட்டிய ஒற்றுமையின் சின்னம் இன்ஷாஅல்லாஹ் வெற்றி திண்ணம் நமது
சமாதான புறாவை ஆதரிப்போம்' என ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் கொள்கைபரப்பு
செயலாளரும் ,அல்-மீசான் பௌண்டசன் தலைவருமான அல்-ஹாஜ் நூருல் ஹுதா உமர் ஊடக
அறிக்கையில் தெரிவித்தார்
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, November 28, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கவிக்கோ அப்துல் ரஹ்மான் பவள விழா (75ஆம் ஆண்டு) தொடக்க உரையின் போது பொழிந்த கவி...
-
பள்ளி வாழ்வில் இருந்து தொலைந்த நண்பர்கள், வாழ வழி தேடி கடல் கடந்து சென்ற நம் ஊர் உறவுகள் என அனைவரையும்
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
-
சீரற்ற வானிலை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ர...
No comments:
Post a Comment
Leave A Reply