
இந்த கிரிஸ்துமஸ் விளம்பரம் நிச்சயம் உங்கள் மனதைத் தொடும் - சொல்லிவிட்டுச் செல்லும் கருத்தியல் அவ்வளவு அழகானது.
முதலாம் உலக மகா யுத்தத்தை அடிப்படையாக கொண்ட கிரிஸ்துமஸ்த் விளம்பரம் இது.
ஒரு கிரிஸ்துமஸ் விடுமுறை எவ்வளவு பெறுமதியானது என்பதை சொல்லாமல் சொல்லிவிடுகிறது.
இவ்விளம்பரத்தை பார்த்து முடிக்கையில் இப்படியே உலகம் இருந்திருந்தால், என எண்ணத் தோன்றுகிறது!!
ஆனால் இவ்விளம்பரத்திற்கு எதிராக 240 முறைப்பாடுகள் பதியப்பட்டிருக்கின்றன.
காரணம் இவ்விளம்பரத்தை உருவாக்கிய Sainsbury நிறுவனம் இங்கிலாந்தின் பிரபலமான சூப்பர்மார்க்கெட் கூட்டுச்சங்கமாகும்.
தமது பெயரை பிரபலப்படுத்த உலகமகா யுத்தத்தை தேவையில்லாமல் துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்கள்.
அதில் போராடிய போர் வீரர்களுக்கு இழுக்கு தேடிக் கொடுக்கிறார்கள் என்பதே பெரும்பாலான குற்றச்சாட்டுக்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply