உலக வறுமை ஒழிப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.வறுமை ஒழிப்புத் தினம் 1992 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது.
இதன் பிரகாரம் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பட்டினியில் இருந்து மக்களை விடுவிப்பதற்கான நாளாக வருடந்தோறும் உலகளாவிய ரீதியில் இந்த தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
உலகில் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இலங்கையிலும் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொருளாதார பிரதியமைச்சர் எஸ்.எம். சந்திரசேன குறிப்பிடுகின்றார்.
குறிப்பாக பொருளதார அபிவிருத்தி அமைச்சினால் வாழ்வின் எழுச்சித் திட்டம் மூலம் வறுமை மட்டத்திலுள்ள 14 இலட்சம் குடும்பங்களின் வறுமை நிலையை அகற்றுவதற்கான அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதியமைச்சர் கூறினார்.
No comments:
Post a Comment
Leave A Reply