கம்பஹா மாவட்டத்தில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை துரித கதியில் அதிகரித்துச் செல்கின்றது என தேசிய பால்வினை நோய்கள் மற்றும் எய்ட்ஸ் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி எய்ட்ஸ் நோயாளிகள் அதிகமாகவுள்ள மாவட்டம் கொழும்பாக இருந்தது.
எனினும், இந்நோய் துரித கதியில் அதிகரித்துச் செல்லும் கம்பஹா மாவட்டம் விரைவில் கொழும்புக்குச் சமனாகக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் கொழும்பில் 44 எய்ட்ஸ் நோயாளிகளும் கம்பஹாவில் 42 நோயாளிகளும் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இந்த வருடத்தில் கடந்த ஆறு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி இலங்கையில் 110 எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர் எனவும் அவர்களுள் அதிக எண்ணிக்கையானோர் 30 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
Leave A Reply