blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, October 17, 2014

சிக்கலில் முன்னால் முதல்வர் ஜெயலலிதா!

newsஜெயலலிதா இன்றைய தினம் ஜாமீனில் வெளிவருவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனி நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. அதேபோல் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கும் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து ஜாமீன் கோரி ஜெயலலிதா சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்ததை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனு மீதான விசாரணை இன்றைய தினம்  உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில், பா.ஜனதா தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ''ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தாம் மனுதாரர் என்பதால் தம்முடைய கருத்தையும் கேட்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார் எனவே இன்றைய தினம் ஜெயலலிதா ஜாமீனில் வெளிவருவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►