மருதமுனை
அல்-மனார் மத்திய கல்லூரி; பெண்கள் பிரிவில் 5ம் ஆண்டில் கல்வி கற்கும்
மாணவர்களுக்கு வகுப்பறைக் கட்டடம் ஒன்றை நிர்மானிப்பதற்கு ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சி உறுப்பினரும், கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணி உறுப்பினருமான இஸட்.ஏ.எச். றஹ்மான் துரித நடவடிக்கை
எடுத்து வருகின்றார்.இதன் முதல் கட்டமாக கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி லால் பெரேராவை இஸட்.ஏ.எச்.றஹ்மான் அண்மையில் சந்தித்து கலந்துரையாடியதையடுத்து விரைவில் கட்டடம் நிர்மானிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் கேணல் பி.ஜே.பிரியந்த கமகே, கேணல் டபள்யு.பி.பண்டித ஆகியோர் தலைமையிலான குழுவினர் அண்மையில் பாடசாலைக்கு வருகை தந்து கட்டம் அமைப்பது தொடர்பாக ஆராய்ந்தனர்.
பின்னர் இராணுவ பொறியில் பிரிவினர் முதல் கட்ட வேலைகளுக்கான மதிப்பீடுகளை செய்துள்ளனர், விரைவில் கட்டட வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply