நீர்கொழும்பு
மற்றும் கண்டி வீதிகள் ஊடாக வாகனங்கள் கட்டுநாயக்க அதிவேக மார்க்கத்தினுள்
பிரவேசிப்பதை கட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்
தலைமையகம் தெரிவிக்கின்றது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் இந்த
திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட
பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார்.
இதன் பிரகாரம்
வார நாட்களில் காலை 7 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் நீர்கொழும்பு
மற்றும் கண்டி வீதிகள் ஊடாக கட்டுநாயக்க அதிவேக மார்க்கத்தினுள் வாகனங்கள்
பிரவேசிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
காலை 9 மணியின் பின்னர் வாகனங்கள் நீர்கொழும்பு மற்றும் கண்டி வீதிகள் ஊடாக உட்பிரவேசிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த
வீதிகள் ஊடாக வாகனங்கள் உட்பிரவேசிப்பதால் அதிவேக வீதியில் வாகன நெறிசல்
ஏற்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.
ஆயினும்,
ஏனைய காலப்பகுதிகளிலும், சனி – ஞாயிறு தினங்களிலும், பொது விடுமுறை
தினங்களிலும் இந்த கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட மாட்டாது என்றும் பொலிஸ்
ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, October 4, 2014
நீர்கொழும்பு – கண்டி அதிவேக வீதியினூடான போக்குவரத்துக்கு விசேட திட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியொன்று நேற்று முன்தினம் இடம்பெற்றது. ப...
-
இலங்கை தொடர்பான அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றம் தெரிவதாக வெளியான செய்திகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
-
அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை சவக்காலைக்கு அருகிலிருந்து பெரியநீலாவணையை பிறப்பிடமாகவும் வீரமுனையை வசிப்பிடமாகவும கொண்ட எஸ்.ராமசந்திர...
-
மைத்திரியை வெற்றி பெற வைப்பதற்காக ஆயிரக்கணக்கான முச்சக்கர வண்டி சாரதிகள் தமது வாகனத்தில் ‘மைத்திரி தினவண்ட ஜயவேவா’ என வண்டிகளை காட்சிப்படுத்...
No comments:
Post a Comment
Leave A Reply