பிரேத பரிசோதனை மேற்கொள்ளாது அரச செலவில் அடக்கம் செய்யப்பட்ட சடலமொன்று மன்னாரில் இன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய இந்த சடலம் இன்று தோண்டியெடுக்கப்பட்டது.
மன்னார் கடற்கரை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இருவேறு சந்தர்ப்பங்களில் கரையொதுங்கிய இரண்டு சடலங்களில் ஒன்று பிரேத பரிசோதனையின்றி தவறுதலாக அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்தே சடலத்தை மீண்டும் தோண்டியெடுக்குமாறு கடந்த வியாழக்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த மூன்றாம் திகதி சவுத்பார் கரையோரத்தில் கரையொதுங்கிய சடலத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் அடையாளம் காண்பதற்காக இரு வாரங்களுக்கு மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்குமாறும், அதன் பின்னர் அரச செலவில் அடக்கம் செய்யுமாறும் சட்ட வைத்திய அதிகாரி அறிவித்துள்ளார்.
இதன் பின்னர் கடந்த 15 ஆம் திகதி மற்றுமொரு சடலமும் அதே பகுதியில் கரையொதுங்கிய நிலையில், அதனையும் அடையாளம் காணும்பொருட்டு இரண்டு வாரங்களுக்கு வைத்தியசாலையில் வைத்திருந்த பின்னர் அரச செலவில் அடக்கம் செய்யுமாறு சட்ட வைத்திய அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
இரண்டு சடலங்களும் உருக்குலைந்து காணப்பட்டதால், முதலாவது சடலத்திற்கு பதிலாக இரண்டாவது சடலம் அடக்கம் செய்யப்பட்டிருந்தது
மற்றைய சடலத்தை அடக்கம் செய்வதற்கு தயாரானபோது, தவறுதலாக சடலம் அடக்கம் செய்யப்பட்டமை தெரியவந்ததை அடுத்து, நீதிமன்றத்தின் கவனத்திற்கு விடயம் கொண்டுசெல்லப்பட்டது.
இதனை கவனத்திற்கொண்ட மன்னார் நீதவான் இன்று சடலத்தை மீண்டும் தோண்டியெடுக்குமாறு உத்தவிட்டிருந்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply