blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, October 16, 2014

கிராமிய அமைப்புக்களை பலப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்!

கிராமிய அமைப்புக்களை பலப்படுத்தி கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கிராம அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடனான ஒன்று கூடல் நிகழ்ச்சி ஒன்று அண்மையில் பத்தரமுல்லை "எங்கள் கிராமம்" கட்டத்தொகுதியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரை நிகழ்த்தும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், அரசு கிராமிய அமைப்புக்களை பலயீனப்படுத்துவதாக பொய் பிரசாரங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த போலிப் பிரசாரத்தில் எவ்வித உண்மையுமில்லை. கிராமிய அமைப்புக்களை பலப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கிறது.

கிராமிய அமைப்புக்களின் ஒத்துழைப்புடனேயே கிராமிய அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென ஜனாதிபதி எனக்கும் எனது அமைச்சின் செயலாளருக்கும் பணிப்புரை விடுத்துள்ளார். எனவே கிராமங்களில் மேற்கொள்ளப்படும் கம நெகும, புற நெகும, திவி நெகும ஆகிய திட்டங்களுக்கு அரசாங்கம் மில்லியன் கணக்கில் அல்ல பில்லியன் கணக்கில் ரூபாய்களை செலவிடுகின்றது.

இந்த அபிவிருத்தி வேலைகளுக்கு உங்கள் கிராமிய அமைப்புக்களின் ஒத்துழைப்பு தேவை. அடுத்த வருடம் முதல் உங்கள் அமைப்புக்களுக்கு நிதி உதவிகளை வழங்கவும் தீர்மானித்துள்ளோம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►