இலங்கை விவகாரங்களில் தலையிடும் உரிமை சர்வதேச சமூகத்திற்குக் கிடையாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புனித பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு உத்தியோகபூர்வமாக அழைப்புவிடும் நோக்கில் இத்தாலி சென்ற ஜனாதிபதி மஹிந்த, அங்கு இலங்கை வாழ் மக்களை சந்தித்தபோது மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
சில நாடுகள் இலங்கையில் ஸ்திர மற்ற நிலைமையை ஏற்படுத்தும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளன. தமிழீழ விடுதலைப்புலிகளை மீள ஒருங்கிணையச் செய்ய ஊக்கமளிப்பதே இந்த நாடுகளின் நோக்கமாக அமைந்துள்ளது.
உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்து நாட்டில் குழப் பங்களை ஏற்படுத்த ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.
வெளிநாடுகளில் வாழ்ந்துவரும் இலங்கை மக்கள் நாட்டுக்கு எதிரான போலிப் பிரசாரங்களை முறியடிப் பதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
இலங்கையில் எனது ஆட்சிக் காலத்திலேயே அதிகளவு தேர்தல் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் நாடு எவ்வளவு ஜனநாயகத்தை உடையது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, October 5, 2014
இலங்கையின் உள்விவகாரத்தில் சர்வதேசம் தலையிடக் கூடாது ; எச்சசரிக்கிறார் மஹிந்த
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யவென இன்று (10) தொடக்கம் விசேட வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸ் திணை...
-
இலங்கை தொடர்பான அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றம் தெரிவதாக வெளியான செய்திகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
-
சுப்பிரமணியன் சாமியின் வாய் சும்மாவே இருக்காது போல. யாரையாவது கிண்டலடித்தபடியே இருக்கிறார்.
-
தலைமன்னார் பகுதியில் 10 வயதுச் சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாடசாலை அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply