ரஜினிகாந்த்
அரசியலுக்கு வர வேண்டும் எனக்கூறி அவரை தர்மசங்கடத்தில் ஆழ்த்த முயற்சி
நடக்கிற போதும் அவர் அரசியலுக்கு வரமாட்டார் என பாரதிய ஜனதா கட்சியின்
தேசிய குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இந்த விடயத்தினை தெரிவித்ததாக 'தி இந்து' செய்தி வெளியிட்டுள்ளது.
“ரஜினி ஒரு தேசியவாதி. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களிடம் அவர் நல்ல மரியாதை கொண்டிருக்கிறார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் எனக்கூறி அவரை தர்மசங்கடத்தில் ஆழ்த்த முயற்சி நடக்கிறது.
அவர் அரசியலுக்கு வருவதாக இல்லை. இதை பெரிதுபடுத்த வேண்டாம்” என இல.கணேசன் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ரஜனிகாந்தின் வீட்டிற்கு சென்று லதா ரஜனிகாந்திடம் ரஜனியின் அரசியல் பிரவேசம் குறித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply