இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 218 கிலோ மீட்டர் கிழக்கே உள்ள பதுல்லை மாவட்டத்தில் மலைப்பாங்கான இடத்தில் பல தேயிலைத்தோட்டங்கள் உள்ளன.
இங்கு இந்திய வம்சாவளி தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
இங்கு
நேற்று முன்தினம் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் 6 வரிசையில் அமைக்கப்பட்டு
இருந்த பல வீடுகள் தரைமட்டமாகின.
நிலச்சரிவில் சிக்கிய 200 பேரை காணவில்லை.
அவர்கள் இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. மீட்புப்பணியில் இலங்கை
ராணுவத்தினர் ஈடுபட்டு உள்ளனர்.
இந்தநிலையில் மீட்புப்பணியில் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்து உள்ளது.
இந்தநிலையில் மீட்புப்பணியில் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்து உள்ளது.
இந்திய தூதர் ஒய்.கே.சின்ஹா, இலங்கை உள்துறை மந்திரி
ஜி.எல்.பீரிசை தொடர்பு கொண்டு இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையே நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்து உள்ளார்.
காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம்
அடைய பிரார்த்திப்பதாகவும் தனது டுவிட்டர் வலைதளத்தில் தெரிவித்து
இருக்கிறார்.
No comments:
Post a Comment
Leave A Reply