பதுளை
மாவட்டத்தில் மண்சரிவு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
நிவாரணங்களை வழங்க மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன.
அதன்படி நிவாரணப் பொருள்கள் மட்டக்களப்பு
நகரிலுள்ள காந்திப் பூங்காவில் சேகரிக்கப்படும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு
வழங்கும் வகையில் பொருள்களை வழங்க விரும்புபவர்கள் இன்று காலை 10 மணி
முதல் முதல் சனிக்கிழமை மாலை 6 மணி வரை கையளிக்கலாம்.
முதல் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை நிவாரணப் பொருள்களை பதுளை மாவட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது
சம்பந்தமான கூட்டம் இன்றைய தினம் மாலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
அரசாங்க அதிபர் தலைமையல் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலக
அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், அரச
சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
பதுளை
மாவட்டத்தின் ஹப்புத்தளை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் வீடு,
வாசல்களையும், உடமைகளையுமு; உயிர்களையும் இழந்து நிர்க்கதியாகி
இடைத்தகங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு எமது மட்டக்களப்பு
மாவட்டத்திலிருந்து நிவாரணப் பொருள்களை வழங்குவதற்காகவே இந்த ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, பொது மக்களும் நலன் விரும்பிகளும்,
வர்த்தகர்களும் தங்களால் இயன்ற பணம், உடுதுணிகள், உலர் உணவுப் பொருள்கள்,
பாடசாலை உபகரணங்கள், பாடசாலை சீருடைகள் உள்ளிட்ட பொருள்களையும்
கையளிக்கலாம்.
கடந்த 2004ஆம் ஆண்டு நமது பிரதேசத்தில் ஏற்பட்ட
சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாட்டின் அனைத்து
மாவட்டத்திலிருந்தும் உதவிகள் கிடைக்கப்பெற்றிருந்தன.
அந்தவகையில் ஏனைய
பிரதேச மக்களுக்கு உதவிகளை நல்குவது நமது கடமையாகும்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சமய முரண்பாடுகள் தொடர்பில் கண்டறிவதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்படும் எனவும் இந்த குழுவானது சமய விவகார அமைச்சின் கீழ் செயற்...
-
அமைச்சரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்கள் சாய்ந்தமருது மக்களினதும், மருதமுனை மக்களினதும் நன்றி உணர்வை மையமாக வை...
-
காலி – கிங்தோட்டை பகுதியிலுள்ள கைத்தொழிற்சாலையொன்றில் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
-
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள் சகலரும் நாடாளுமன்ற அமர்வை ஒரு மாதத்திற்கு பகிஸ்கரிப்பதற்கு ஆலோசித்துவருவதாக நம...
No comments:
Post a Comment
Leave A Reply