கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோயாளர்ளின் வீதம் அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.மாவட்டத்தில் இடைக்கிடை நிலவும் சீரற்ற வானிலை டெங்கு நோய் பரவுவதற்கு காரணம் என கொழும்பு மாநகர சபையின் தலைமை சுகாதார வைத்திய பரிசோதகர் ருவன் விஜயமுனி குறிப்பிடுகின்றார்.
கொழும்பு மாவட்டத்தில் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் மூன்றாம் திகதி வரை மாத்திரம் 177 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தலைமை சுகாதார வைத்திய பரிசோதகர் ருவன் விஜயமுனி சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply