blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, October 10, 2014

மோடியின் வேண்டுகோளை ஏற்று சர்வதேச யோகா தினம்: ஐ.நா.சபை ஆலோசனை

மோடியின் வேண்டுகோளை ஏற்று சர்வதேச யோகா தினம்: ஐ.நா.சபை ஆலோசனைஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி;

’இந்தியாவின் ஐயாயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச்செய்யும் வகையில் சர்வதேச யோகா தினமாக ஆண்டின் ஒரு தேதியை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

இது தொடர்பாக, இந்தியாவுக்கான ஐ.நா.சபையின் நிரந்தர தூதரகத்தின் வாயிலாக வடிவமைக்கப்பட்டுள்ள மாதிரி வரைவு அறிக்கையின் மீது வரும் 14-ம் தேதி ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக்கு பின்னர் சர்வதேச யோகா தினமாக ஒரு தேதியை ஐ.நா.சபை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

193 உறுப்பு நாடுகள் அடங்கிய ஐ.நா.சபையில் கடந்த மாதம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘மனதையும்-உடலையும், சிந்தனையையும்-செயலையும், கட்டுப்பாட்டையும்- மனநிறைவையும், மனிதரையும்-இயற்கையையும் ஒன்றிணைத்து, ஆரோக்கியம் மற்றும் சுகவாழ்வுக்கு நலம் பயக்கும் யோகா கலையை உலகம் முழுவதும் பரப்பும் வகையில் சர்வதேச யோகா தினம் அறிவிக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தியிருந்தது, நினைவிருக்கலாம்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►