சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.ஹூத் ஹூத் புயல் காரணமாக விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறவிருந்த இந்திய, மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை அவுஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி முதலிடத்தை தொடர்ந்தும் தக்கவைத்துள்ளது.
இந்த இரு காரணங்களாலும் அவுஸ்திரேலியாவுடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்ட இந்தியா மூன்றாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தமையும் இந்த பின்னடைவுக்கு ஒரு காரணமாகும்.
இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் இந்திய வெற்றிபெரும் பட்சத்தில் இரண்டாம் இடத்திற்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply