பூண்டுலோயா பகுதியில் நீர்நிலையில் மூழ்கி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், நீர்நிலையில் பூ பறிப்பதற்காக சென்ற மூன்று மாணவர்களில் ஒருவர் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.
தரம் 11 இல் கல்வி பயிலும் 16 வயதான மாணவர் ஒருவரே நீரில் மூழ்கியுள்ளார்.
மாணவனின் சடலம் மல்தெனிய கிராமிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply