blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, October 1, 2014

சர்வதேச சிறுவர் தினம் இன்று!!

சர்வதேச சிறுவர் தினம் இன்றுசர்வதேச சிறுவர் தினம் இன்று கொண்டாடப்படுவதுடன், சர்வதேச முதியோர் தினமும் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி சர்வதேச ரீதியில் அமுலுக்கு கொண்டுவரப்பட்ட சிறுவர் உரிமை பிரகடனத்தில் 1991 ஆம் ஆண்டு இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி சர்வதேச சிறுவர் தினம் இலங்கையில் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் நடைபெறவுள்ளது.

இதனைத் தவிர வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட நாட்டின் சகல பகுதிகளிலும் சிறுவர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணிகளும், கருத்தரங்களும் இன்று நடைபெறவுள்ளன.

இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள். நாளைய எதிர்காலம் நன்றாக அமைய இன்றைய சிறுவர்களை நல்ல ஒரு பிரஜையாக உருவாக்கபட வேண்டியது அவசியமானதொன்றாகும்.

சிறுவர்கள் துன்புறுத்தல்கள் இன்று பொதுவாக நடக்கும் விடயமாகிவிட்டது. இந்நிலைமை மாற்றப்பட வேண்டும்.

சிறுவர்களை நாளைய தலைவர்களாக உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடம் தான் உண்டு. அதே போல் பெற்றோர், இருக்கும் சூழல், குடும்ப நிலைமை, நண்பர்கள் போன்ற இதர காரணிகளும் அதனை தீர்மானிக்கின்றன.

சர்வதேச ரீதியாக பல்வேறு வகைகளில் சிறுவர்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். பாடசாலை இடைவிலகல், வறுமை, போஷாக்கின்மை, பாலியல் வன்முறைகள் என அவர்களுக்கு எதிரான வன்முறைகளின் பட்டியல் நீள்கிறது.

இன்று வறுமையின் காரணமாக தாய்மார்கள் வெளியூர் வேலைக்குச் செல்வதால் சிறுவர்கள் அந்நியரால் பல்வேறு கொடுமைகளை அனுபவிக்கின்றனர்.

போதைபொருள் பாவனை, விற்பனை அல்லது அந்நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து விலகியிருப்பதற்கான உரிமை சிறுவர்களுக்கு உண்டு. பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுதல், அல்லது பாலியல் ரீதியாகத் தவறான பயன்களைப் பெறுதல், மற்றும் சட்டவிரோத பாலியல் நடவடிக்கைகளுக்காக தூண்டப்படுதல் ஆகியவற்றிலிருந்து விலகியிருப்பதற்கு சிறுவர்களுக்கு உரிமை உண்டு.

சிறுவர்களுக்கான பல தொண்டு நிறுவனங்கள் பல உதவிகள் செய்தாலும் அவை எல்லோரையும் சென்றடைவதில்லை என்பதே இன்றைய தினத்தில் சிந்திக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►