இரத்தினபுரியில்
பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் தாக்குதலுக்கு இலக்கான பெண் 50 மில்லியன்
ரூபா நஷ்டஈடு கோரி, உயர்நீதிமன்றத்தில் இன்று அடிப்படைஉரிமை மனு
தாக்கல்செய்துள்ளார்.இரத்தினபுரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, இரத்தினபுரி பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் ஊடகப் சேசாளர் ஆகியோர் இந்த மனுவில்பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இரத்தினப்புரி பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் குறித்த உத்தியோகஸ்தர், நகர மத்தியில் பலர் முன்னிலையில் வயர் ஒன்றினால் தன்மீது தாக்குதல் மேற்கொண்ட பின்னர் காலால் உதைத்து தாக்கியதாகவும் மனுதாரர் தாக்குதல் மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகஸ்தர், தன்னை பாலியல் தேவைக்கு அழைத்ததாகவும்அதற்கு தாம் மறுப்பு தெரிவித்ததாகவும் மனுதாரர் மேலும்கூறியுள்ளார்.
பின்னர் மதுபான போத்தல் பெற்றுத்தருமாறு கோரியதாகவும் அதற்கும் மறுப்பு தெரிவித்த நிலையில் தன்னுடன் முறுகல் ஏற்பட்டதாகவும் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தாக்குதல் தொடர்பில் முறைப்பபாடு செய்வதற்கு சென்ற போது பொலிஸ் நிலையத்தின் தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர் அதற்கு எவ்வித நடவடிக்கையும்மேற்கொள்ளாமல’ இருந்ததாக குறித்த பெண்தெரிவித்துள்ளார்.
பின்னர் தனது உயிருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் ஏற்பட்ட அச்சத்தினால் பொலிஸாரின் உதவியை நாடுவதற்கு மறுத்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply