சீனாவில் பிச்சைக்கார முதியவர் ஒருவர் 3 கல்லூரி மாணவர்களின் படிப்புக்கு உதவுவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.சீனாவின் தலைநகர் பீஜிங்கில் (Beijing) வசிக்கும் முதியவர் (65) ஒருவர் அப்பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்து வருகிறார்.
இவர் பிச்சை எடுக்கும் பணத்தை மாதந்தோறும் அங்குள்ள அஞ்சலகம் மூலம் தனது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறார்.
இதுகுறித்து அஞ்சலக ஊழியர்கள் கூறுகையில், மாதம் தவறாமல் தான் பிச்சை எடுத்த பணத்தை எங்கள் அலுவலகத்திற்கு இவர் கொண்டுவருவது வழக்கம் என்றும் ஒரு மாதத்திற்கு மட்டும் சுமார் 10,000 RMB (99,000 ரூபாய்) சம்பாதிப்பார் எனவும் கூறியுள்ளனர்.
வெகு காலமாக பிச்சை எடுத்து வரும் இவர், சொந்த ஊரில் வீடு கட்டியுள்ளது மட்டுமின்றி 3 மாணவர்களின் கல்லூரி படிப்புக்கும் உதவுகிறார் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment
Leave A Reply