
அமெரிக்காவின் அர்லிங்டன்(Arlington) நகரை சேர்ந்த அவலின்(Avalin age - 5) என்ற சிறுமி பலத்த காயத்துடன் வீடு திரும்பியுள்ளார்.
இவர் பள்ளிக்கூடத்தின் விளையாட்டு மைதானத்தில் விழுந்து அடிபட்டதாக
பள்ளி நிறுவனம் கூறி வரும் நிலையில், சிறுமியின் தாயார், தனது மகள்
தாக்கப்பட்டுள்ளார் என சர்ச்சை எழுப்பியுள்ளார்.
இதனை அடுத்து இவர் தனது மகளின் காயங்களை டுவிட்டர் பக்கத்தில்
வெளியிட்டு தனது மகளுக்கு நியாயம் கிடைக்க நிதி உதவி செய்ய வேண்டும் என
வேண்டுகோள் விடுத்திருந்தார்.
சிறுமியின் அடிபட்ட முகத்தின் புகைப்படங்களை பார்த்தால் எவரோ தாக்கியது போல இருப்பதால் பெரும்பாலான மக்கள் நிதி கொடுத்துள்ளனர்.
இந்த காயம் ஏற்பட்ட பின்னணியில் எவரும் ஈடுபட்டுள்ளதாக இதுவரை எந்த
தடையமும் சிக்கவில்லை என்றாலும், பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.
மேலும் லேசி, தனது மகளுக்கு என்ன நடந்தது என தெரிந்து கொள்ளும் வரையில் போராட போவதாக உறுதியளித்துள்ளார்.



உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply