blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, September 6, 2014

தலைமன்னார் கடலில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா மீட்பு

மன்னார் பேசாலை மற்றும் தலைமன்னாருக்கு இடையில் உள்ள கடலில் சுமார் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் மூழ்க செய்து மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

மன்னார் பொலிஸ் பிரிவின் மோசடி தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து கடற்படையின் புலனாய்வு பிரிவின் உதவியுடன் இந்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. 
 இரண்டு பிளாஸ்டிக் கொள்கலன்களில் இட்டு கஞ்சா தொகை கடலில் மூழ்க செய்து மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அவற்றில் 18.15 கிலோ கிராம் கஞ்சா இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
இது குறித்து தலைமன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.                                                

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►