மேற்கு
வங்காளத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷாருக்கான் அங்கு ஒரு பெண்
பொலிஸ் அதிகாரியை தூக்கி நடனம் ஆடி புதிய சர்ச்சயைக் கிளப்பி உள்ளார்.
மேற்கு
வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற பொலிஸ் துறை சார்ந்த
நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மேற்கு வங்காள
மாநிலத்தின் விளம்பர தூதராக இருக்கும் இந்தி நடிகர் ஷாருக் கான் உள்ளிட்ட
பலர் கலந்து கொண்டனர்.
விழா மேடையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றபோது சில இந்தி பாடல்களுக்கு நடனம்
ஆடிய ஷாருக் கான் மேடையில் பாதுகாப்புக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு
பெண் பொலிஸை தூக்கி வைத்துக் கொண்டு நடனம் ஆடத் தொடங்கினார்.
இந்த
சம்பவம் மேற்கு வங்காள மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் பொலிஸ் சீருடையை அவமதிக்கும் விதமாக உள்ளது.
அந்த பெண் காவலர்
மீது நடவடிக்கை எடுத்து பொலிஸ் சீருடையின் கண்ணியத்தை காப்பாற்ற வேண்டும்
என்று ஒரு தரப்பினரும், அது ஒரு பொது நிகழ்ச்சி இந்த பிரச்சனையை பெரிது
படுத்தக் கூடாது என்று இன்னொரு தரப்பினரும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
என்னுடன் போட்டியிட மைத்திரிபால சிறிசேனவுக்கு முடியுமா? அவர் எனக்கு எவ்வகையிலும் ஒரு சவாலாக இருக்கவே முடியாது.
-
கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தின் அனைத்து கல்விசார் நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டிருப்பதாக கிழக்கு பல்...
-
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யவென இன்று (10) தொடக்கம் விசேட வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸ் திணை...
-
சிறுநீரக சிகிச்சை நிலையமொன்றை அமைத்துக் கொடுக்க சீனா இணக்கம் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply