blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, August 5, 2014

தவறி வீழ்ந்த செல்போனை எடுக்க குளத்தையே காலி செய்த சிறுவன்!


தவறி வீழ்ந்த செல்போனை எடுக்க குழத்தையே காலி செய்த சிறுவன்!மீன் பிடிக்கும் போது, குளத்தில் தவறி வீழ்ந்த தனது செல்போனை எடுக்க தண்ணீர் முழுவதையும் சிறுவன் ஒருவன் வெளியேற்றிய சம்பவம் ஜெர்மனியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஜெர்மனியில் உள்ள மீன் பிடிக்கும் குளம் ஒன்றில், 16 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக செல்போன் குளத்தில் தவறி வீழ்ந்துள்ளது.

விலை உயர்ந்த ஸ்மார்ட் போன் என்பதால், அதனை எடுக்க நூதன முறையொன்றைக் கண்டுபிடித்தான்.

அதன்படி, அன்று நள்ளிரவில் மீண்டும் குளத்துக்கு நண்பர்களுடன் சென்றான். பெரிய குழாய்கள் மற்றும் 2 மோட்டார்களை அவர்கள் கொண்டு சென்றுள்ளனர்.

அவற்றின் உதவியுடன் குளத்தின் நீரை உறிஞ்சி அருகே உள்ள கழிவறைக்குள் தண்ணீரை வெளியேற்றியுள்ளனர்.

ஆனால், கழிவறை வழியாக  நீர் வெளியேறும் வசதி இல்லாததால் குளத்து நீர் முழுவதும் அப்படியே வழிந்து அருகிலுள்ள கார் நிறுத்துமிடத்தில் சென்று நிரம்பியுள்ளது.

இதைப் பார்த்த சிலர் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில், தனது செல்போனில் உள்ள மெமரி கார்டில் நண்பர்களுடன் எடுத்த படங்கள், ஏராளமான தொலைபேசி இலக்கங்கள் இருப்பதால் அவ்வாறு செய்ததாகத் தெரிவித்துள்ளான்.

சிறுவன் என்பதால் அவனுக்கு அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது.

பின்னர் சேதமடைந்த குளம் மற்றும் கிளப் கழிவறைகள் உடனடியாக சரி செய்யப்பட்டு, குளத்தில் மீண்டும் தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►