புதுவை மாநிலம், காரைக்கால் காளிகுப்பத்தில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி
உள்ளது.
இங்கு மதுரை வத்தலகுண்டை சேர்ந்த நாகூர் மொய்தீன்(22)
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இறுதியாண்டு படித்து வருகிறார்.
அதே
கல்லூரியில் காரைக்கால் பூவத்தை சேர்ந்த கார்த்திகா, பேராசிரியையாக
உள்ளார்.
பேஸ்புக் அக்கவுன்ட்டில் தனது படத்தை கார்த்திகா அப்லோடு
செய்திருந்தார். இதற்கு நாகூர் மொய்தீன், கமென்ட் பதிவு செய்திருந்தார்.
இதுபற்றி கார்த்திகா, கணவர் ரவிக்குமாரிடம் கூறினார்.
அவர் கல்லூரி
நிர்வாகத்திலும், கோட்டுச்சேரி போலீசிலும் புகார் செய்தார். கோட்டுச்சேரி
போலீசார் நாகூர் மொய்தீனை அழைத்து விசாரித்து அவரை கடுமையாக தாக்கி,
மிரட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.
நேற்று அவர் கல்லூரிக்கு சென்றபோது,
அவரை கல்லூரி நிர்வாகத்தினர், கார்த்திகா காலில் விழுந்து மன்னிப்பு
கோரும்படியும், பெற்றோரை அழைத்து வந்து கல்லூரி நிர்வாகத்திடம் மன்னிப்பு
கோரும்படியும் வலியுறுத்தியுள்ளனர். இதுபற்றி தனது நண்பர்களிடம் கூறி
நாகூர் மொய்தீன் அழுதுள்ளார்.
பின்னர் நண்பர்களுக்கு தெரியாமல்
கழிவறைக்கு சென்று பையில் வைத்திருந்த பூச்சிமருந்தை குடித்துவிட்டு,
வகுப்பறையில் வாந்தி எடுத்து மயங்கிவிழுந்தார். சக மாணவர்கள் நாகூர்
மொய்தீனை காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில்,
மாணவனை தாக்கிய கோட்டுச்சேரி போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மீது
நடவடிக்கை எடுக்கக்கோரி, சக மாணவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்
கூடி, துணை கலெக்டர் மாணிக்க தீபனிடம் மனு கொடுத்தனர். இச்சம்பவம்
காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, August 7, 2014
பேஸ்புக்கில் ஆசிரியை பட கமென்ட்; மன்னிப்பு கேட்க சொன்னதால் விஷம் குடித்த இன்ஜினியரிங் மாணவர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
நைஜிரியாவில் கடத்தப்பட்ட பெண்கள் திருமணத்திற்கென விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போஹோ ஹராம் ஆயதாரிகளால் கடத்தப்பட்...
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....
-
மன்னார், மருதனார்மடு பகுதியில் மிருகவெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
-
மாத்தளை மற்றும் பதுளை மாவட்டம் - தபால்மூல வாக்கு முடிவுகள்:
No comments:
Post a Comment
Leave A Reply