blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, August 8, 2014

17 இலட்சம் மக்களைக் கொன்று குவித்த கெமரூர்ச் ஆட்சியாளருக்கு சாகும் வரை சிறை

17 இலட்சம் மக்களைக் கொன்று குவித்த கெமரூர்ச் ஆட்சியாளருக்கு சாகும் வரை சிறை! ஐ.நா. சர்வதேச நீதிமன்றம் விதித்ததுகம்போடியாவில் இனப்படுகொலை செய்த கெமர்ரூச் ஆட்சியாளர்கள் இருவருக்கு ஆயுள் முழுவதும் சிறை வாசம் அனுபவிக்குமாறு தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது ஐ.நாவின் சர்வதேச விசாரணை நீதிமன்றம்.
30 வருடங்களாக நடந்த இந்த வழக்கில் போர்க் குற்றாவளிகளாக இனங்காணப்பட்ட 88 வயதான நௌவான்சியா, 83 வயதான கெஹியூசம்பான் ஆகியோருக்கே நேற்று வியாழக்கிழமை இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. 1975 -79 கள் வரை கம்போடியாவை பொல்பொட் தலைமையில் இயங்சரே, நௌவான்சியா, கெஹியூசம்பான் ஆகியோர் ஆட்சி செய்தனர்.

வியட்நாமில் இருந்து பிழைப்புத் தேடி சென்ற மக்கள் இவர்களின் ஆட்சியை எதிர்த்திருந்தனர்.

தம்மை எதிர்த்துப் போராடிய அந்த மக்களில் 17 இலட்சம் பேரை இந்த ஆட்சியாளர்கள் கொன்று குவித்திருந்தனர் என்று கூறப்பட்டது.

மிகப்பெரிய இனப்படுகொலையை செய்த இந்த ஆட்சியாளர்கள் மீது ஐ.நாவின் சர்வதேச நீதிமன்றம் போர்க்குற்ற விசாரணைகளை நடத்தியது.

கடந்த 30 வருடங்களாக நடத்தப்பட்ட இந்த விசாரணைக் காலத்தில் தலைமை ஆட்சியாளரான பொல்பொட், இயங்சரே ஆகியோர் மரணமடைந்து விட்டனர்.

இந்நிலையிலேயே தற்போது உயிருடன் உள்ள நெளவாடியா, கெஹியூ சத்பா ஆகியோருக்கு சாகும் வரை சிறை வாசம் அனுபவிக்க சர்வதேச நீதிமன்றம் நேற்றுத் தீர்ப்பளித்தது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►