தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கிளப்புகளில் வேட்டி கட்டி வந்தால்,
கிளப்புக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.
இதனை எதிர்த்து பலர் குரல் கொடுத்த
நிலையில், முதல்வர் ஜெயலலிதா வேட்டிக்கு தடை விதிப்பவர்களுக்கு கடும்
கண்டனம் தெரிவித்ததுடன், சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவீற்றினார்.
இந்த
நிலையில் வேட்டிக்கு தடை விதித்தால், ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25000
அபராதமும் விதிக்கப்படும் என்று சட்டசபையில் மசோதா ஒன்றை நேற்று முதல்வர்
ஜெயலலிதா தாக்கல் செய்தார்.
மசோதா விவரம்:
சில மன்றங்கள்
தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பொது இடங்களுக்குள் மேற்கத்திய பாணியில் உடையை
அணியவில்லை என்றால் அனுமதிப்பது இல்லை என்று அரசின் கவனத்துக்கு வந்தது.
ஒவ்வோர்
இந்தியக் குடிமகனும் நமது தொன்மையான சிறப்பு மிக்க பன்முக கூட்டுப்
பண்பாட்டின் மதிப்பை உணர்ந்து அதனைப் பாதுகாப்பது அடிப்படைக் கடமை ஆகும்.
அதனால்,
மேற்கத்திய ஆடை அணியவில்லை என்ற காரணத்துக்காக ஒருவரை உள்ளே நுழைய அனுமதி
மறுக்கும் தடை என்பது முந்தையகால ஆங்கிலேயப் பேரரசின் ஆதிக்கச் செயலாகும்.
அது இன்னும் தொடர்கிறது என்பதையே அந்தத் தடை குறிக்கிறது.
கடந்த காலத்திலும் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்பட்டுள்ள காரணத்தால், இந்த தடைகள் அகற்றப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியமாகிறது.
தடை
நீக்கம்: அதனால், அனைத்து மன்றங்களின் பொது இடங்களுக்குள் தமிழர்
பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வேட்டி அல்லது வேறு எந்த ஒரு இந்தியப்
பாரம்பரிய உடையை அணிந்து வருபவர்களையும் நுழைய அனுமதி மறுக்கும் வகையில்
விதிக்கப்பட்டு இருக்கும் தடையை நீக்குவது என அரசு முடிவு செய்துள்ளது.
எவை...
எவை?...: பொது இடங்கள் என்பது பொதுமக்கள் பரவலாகக் கலந்து கொள்ளும்
விழாக்கள், நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், விளையாட்டுகள், இதர
நிகழ்வுகள் ஆகியவை நடைபெறும் இடங்களான மனமகிழ் மன்றங்கள், உணவகங்கள்,
திரையரங்குகள், பெரும் வணிக வளாகங்கள், அவைக் கூடங்கள், விளையாட்டு
அரங்குகள், அரசால் அறிவிக்கப்படும் இதர இடங்கள் எனப் பொருள்படும்.
ஓராண்டு
சிறை: மனமகிழ் மன்றம், தனி நபர்களின் கழகம், அறக்கட்டளை நிறுவனம் அல்லது
சங்கத்தால் செய்யப்பட்ட விதி, ஒழுங்குமுறை விதி, துணைவிதி அல்லது
பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கை, அறிவுறுத்தல் வழிகாட்டு நெறி உள்பட
எதுவானாலும் தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி அல்லது பிற இந்தியப் பாரம்பரிய
உடை எதையும் அணிந்து வரும் யாரையும், அவர் அணிந்து இருக்கும் உடையைக்
காரணம் காட்டி அனுமதி மறுக்கக் கூடாது.
இதை மீறுவோர் யாராக இருப்பினும் ஓராண்டு சிறை தண்டனை, ரூ.25,000 அபராதமும் விதிக்கப்படும்.
விதிவிலக்கு:
குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் நபர், குற்றம் தனது கவனத்துக்கு வரப்பெறாமல்
நிகழ்ந்தது என்றும், குற்றம் நடைபெறாமல் இருப்பதற்கு தான் அனைத்து வகையான
முயற்சிகளையும் மேற்கொண்டதாகவும் நிரூபிக்கும் பட்சத்தில் அவரை இந்தச் சட்ட
விதிகள் தண்டனைக்கு உள்ளாக்காது.
ஆனால், அதை நடத்துபவர்கள்
சம்மதத்துடன் மறைமுக ஆதரவுடன் நடைபெறும் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால்,
அவர் குற்றம் செய்ததாகக் கருதப்பட்டு தண்டனை வழங்கப்படும் என்றும் அதில்
கூறப்பட்டுள்ளது.
புதிய சட்டம் ஏன்? தமிழ்நாடு கிரிக்கெட்
மன்றத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் உயர் நீதிமன்ற நீதிபதி டி.அரிபரந்தாமன்,
மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி ஆகியோர் வேட்டி அணிந்து செல்ல
அனுமதிக்கப்படவில்லை.
இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்தனர். பேரவையிலும் இந்த பிரச்னை ஜூலை 17-ஆம் தேதி எழுப்பப்பட்டது.
அப்போது
முதல்வர் ஜெயலலிதா, இந்த பிரச்னையை நிரந்தரமாக தீர்க்கும் பொருட்டு நிகழ்
சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே இதற்குத் தேவையான சட்ட மசோதா தாக்கல்
செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இஸ்லாமாபாத்,பாகிஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்ட விமானப்படைக்கு சொந்தமான விமானம் நொறுங்கி விழுந்ததில் 2 விமானிகள் இறந்தனர். தலைநகர் இஸ்லாமா...
-
ஆசிரியர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டியில் கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் உடற்கல்வி ஆசிரியர் ஐ.எல்.எம்.ஜின்னா தங்கப்பதக்...
-
"மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாக வருவதற்கு சட்டம் இடமளிக்காது" - இவ்வாறு முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெ...
-
கூலிக்காக வர்ணம் (பெயின்ற்) பூசச் சென்ற இளைஞர் ஒருவர் அந்த வீட்டிலிருந்த மூன்று பவுண் எடை கொண்ட சங்கிலியை திருடிய சம்பவம் ஒன்று அண்மையில்...
No comments:
Post a Comment
Leave A Reply