blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, August 5, 2014

இலங்கைத் தூதரை அழைத்து நேரில் கண்டித்தது இந்தியா!

இலங்கைத் தூதரை அழைத்து  நேரில் கண்டித்தது இந்தியா!தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகக் கட்டுரை வெளியிட்டதற்காக இலங்கை தூதரை நேரில் அழைத்து, மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு கடிதங்கள் எழுதிய விடயம் குறித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சு இணையதளத்தில் அவதூறாகக் கட்டுரை வெளியிடப்பட்டது.

இதனால் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இலங்கை அரசுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.

இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. முதலமைச்சர் ஜெயலலிதாவும், இலங்கை தூதரை நேரில் அழைத்து கண்டிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதோடு, அந்த கட்டுரையையும் இணையத்தளத்தில் இருந்து நீக்கியது.

இந்த நிலையில், இந்தப் பிரச்சினையை நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் அ.தி.மு.க. கிளப்பியது.

சபையில் பதில் அளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்சுவராஜ், மத்திய அரசு இலங்கை தூதரை அழைத்து தனது கண்டனத்தை தெரிவிக்கும் என உறுதியளித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் டில்லியில் உள்ள இலங்கை தூதர் சுதர்சன செனவிரத்னவை நேரில் அழைத்தது, தமது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இலங்கை விவகாரங்களை கவனிக்கும் இணைச் செயலாளர், தமது கண்டனத்தை தெரிவித்தார் என்று கூறப்பட்டது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►